Wednesday, 23 July 2008

புலிகளை இந்த வருட இறுதிக்குள் தோற்கடிப்போம் என்ற அரசாங்கத்தின் கூற்று சாத்தியப்படாது - சிவாஜிலிங்கம்

சிறீலங்கா அரசாங்கம் கூறுவது போன்று இந்த வருட இறுதிக்குள் விடுதலைப் புலிகளை தோற்கடிக்க முடியாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

பொட்டம்லைன் என்ற ஆங்கில நாளேட்டுக்கு அவர் கருத்துரைக்கும் போதே அவர் இக்கருத்தினைதத் தெரிவித்துள்ளார்.

இந்த வருட இறுதிக்குள் விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்படுவார்கள் என்ற சிறீலங்கா அரசாங்கத்தின் கூற்று சாத்தியப்படாது. யுத்தத்தை முடிவுக்குள் கொண்டுவருவது தொடர்பில் சிறீலங்கா இராணுவத் தளபதி சரத்பொன்சேகா மாறுபட்ட கருத்துக்களை கூறிவருகின்றார்.

எதிர்வரும் காலங்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, கிழக்கில் நடைபெறும் பொதுத் தேர்தல்கள் மற்றும் மாகாணசபைத் தேர்தல்களிலும் போட்டியிடும். வடக்கில் ஒருபோதும் மாகாணசபைத் தேர்தல்கள் நடத்த முடியாது. அத்துடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பொதுத் தேர்தல்களிலும் போட்டியிடும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

No comments: