வடபோர் முனையில் பயன்படுத்துவதற்கான பெருந்தொகையான ஆயுத தளபாடங்கள் அடங்கிய தொகுதி ஒன்று செக் குடியரசிடமிருந்து கடந்த வாரம் கொழும்பு வந்து சேர்ந்திருப்பதாக சிறிலங்கா இராணுவ வட்டாரங்களிலிருந்து தெரியவந்துள்ளது.
செக் தயாரிப்பான
40 குழல்கள் கொண்ட ஆர்.எம். 70 பல்குழல் பீரங்கிகளுக்கான 122 மில்லி மீற்றர் ஏவுகணைகள்,
பி.எம்.பி.-3 தொடர் இலக்க துருப்புக்காவிகளுக்கான உதிரிப்பாகங்கள் உட்பட பெருந்தொகையான ஆயுத தளபாடங்கள் கடந்த சனிக்கிழமை கொழும்பு வந்து சேர்ந்திருப்பதாக மேற்படித்தகவல் மேலும் தெரிவித்தது.
கடந்த வருடம் நவம்பர் மாதம் செக் நாட்டுக்குச் சென்ற சிறிலங்கா இராணுவ உயரதிகாரிகள் அடங்கிய குழு, இந்த ஆயுத தளபாடக்கொள்வனவை இறுதி செய்து செய்து விட்டு வந்தமை தெரிந்ததே.
இதேவேளை, ஸ்லோவோக்கியா நாட்டிடமிருந்து ஆர்.எம். 70 பல்குழல் பீரங்கிகளுக்கான ஏவுகணைகளை கொள்வனவு செய்வது தொடர்பான முயற்சிகளில் ஈடுபட்டிருந்த சிறிலங்கா இராணுவம் கடந்த மாதம் அவற்றினைப் பெற்றுக்கொண்டதாக தெரியவருகின்றது.
No comments:
Post a Comment