சார்க் மாநாடு நடைபெறும் காலப்பகுதியில் இலங்கையின் வான் பாதுகாப்பு நடவடிக்கைகளை நெறிப்படுத்தவும் இலங்கை விமானப்படையினருக்கு அது தொடர்பான பயிற்சிகளை வழங்கவும் இந்தியா முன்வந்துள்ளதாக சிங்கள ஊடகம் தெரிவித்துள்ளது.
இதற்காக இந்தியாவைச் சேர்ந்த 207 சிறப்பு நிபுணர்கள் தற்போது இலங்கைக்கு சென்றுள்ளதாக பாதுகாப்புத்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன. வான் பரப்பு பாதுகாப்புக்கான ரேடார் கட்டமைப்பு வசதிகளை இந்தியாவே இலங்கைக்கு வழங்கியுள்ளது.
இந்த நிலையில் இந்திய பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்ட வெளிநாட்டுத் தலைவர்களின் பாதுகாப்புக்காக இந்திய இந்த வான் பாதுகாப்பு நடவடிக்கைகளை நெறிப்படுத்த முன்வந்துள்ளதாகவும்
இந்தியாவின் 3 யுத்த கப்பல்கள் சார்க் மாநாடு நடைபெறும் காலப்பகுதியில் இலங்கையில் தரித்து நிற்கும் எனவும் தகவல்கள் கிடைத்துள்ளதாக அந்த சிங்கள ஊடகம் தெரிவித்துள்ளது.
Saturday, 12 July 2008
சார்க் மகாநாட்டு காலப் பகுதியில் இலங்கையின் வான்பாதுகாப்பு நெறிமுறை இந்தியாவிடம்?
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment