பொலநறுவை மாவட்டம் ஹிங்குராக்கொட வனப் பகுதியில் பாரிய மனிதப் புதைகுழி ஒன்று இனம் காயப்பட்டுள்ளதாக சிறீலங்கா காவல்துறையின் ஊடகப் பேச்சாளர் ரஞ்சித் குணசேகரா தெரிவித்துள்ளார்.
ஹிங்குராக்கொட தியாபெதும வனப் பகுதியிலேயே இப் புதைகுழி இனம் காணப்பட்டுள்ளது. தியாபெதும வனப்பகுதிக்கு வேட்டைக்குச் சென்றிருந்தவர்களால் அங்கு குழி ஒன்றை அவதானித்துள்ளனர். இதனையடுத்து அக்குழியை அகழ்ந்த போது மனித எலும்புக்கூடுகளின் எச்சங்கள் காணப்பட்டுள்ளது.
இப்பகுதியில் சிறீலங்காவின் மூன்றாவது வான்படைத் தளம் அமைந்திருப்பதோடு இப்பகுதிகளிலேயே சிறீலங்கா துணை இராணுவக் குழுவான கருணா ஒட்டுக்குழுவின் முகாங்கள் அமைந்திருந்தமை இங்கே குறிப்பிடத் தக்கது.
இந்த எலும்புக் கூடுகள் கடந்த சில ஆண்டுகளால் சிறீலங்காப் படையினர் மற்றும் ஒட்டுக்குழுவினரால் கடத்தப்பட்டு காணாமல் போனவர்களுடையதாக இருக்கலாம் என நம்பப்படுகின்றது.
No comments:
Post a Comment