வெள்ளை வானில் ஆட்களைக் கடத்தும் நபர்கள் குறித்த விபரங்களை வெளியிட நாம் தயாராக வுள்ளோம். அரசியல்வாதிகளுக்கு அடிபணியாது அவர்களை சட்டத்தின் முன் நிறுத்த புதிய பொலிஸ்மா அதிபர் ஜயந்த விக்கிரமரட்ண தயாரா? என்று ஐக்கிய தேசிய கட்சியின் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பாலித்த பண்டார கேள்வி எழுப்பினார்.
பொறுப்பு மிக்க அதிகாரியான பொலிஸ்மா அதிபர் வெள்ளை வானை பார்க்க தானும் ஆவலாக உள்ளதாக தெரிவித்த கருத்து கண்டனத்துக்குரியதாகும். இத்தகைய கருத்தினை வெளியிடும் இவர் கடத்தல் சூத்திரதாரிகளை கைது செய்யும் வகையில் எவ்வாறு செயற்படுவார் என்றும் அவர் சந்தேகம் வெளியிட்டுள்ளார்.
எதிர்கட்சி தலைவர் காரியாலயத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து தெ?வித்த போதே அவர் மேற்கண்டவாறு தெ?வித்தார்.
அங்கு அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில் மேலும் கூறியதாவது; பொலிஸ் சேவை என்பது தற்போது அரசியலுக்கும் அரசியல்வாதிகளுக்கும் அடிபணிந்து செயற்படும் சேவையாக உருவெடுத்துள்ளது. அதன் பிரகாரமே சில பொலிஸ் அதிகாரிகள் செயற்பட்டும் வருகின்றனர்.
இவ்வாறான நடவடிக்கைகளில் இருந்து பொதுமக்களைப் பாதுகாக்கும் பொருட்டு ஐக்கிய தேசிய கட்சியினால் பொதுமக்கள் பாதுகாப்பு கண்காணிப்புக் குழுவொன்றை உருவாக்கியுள்ளோம். இதன் இணைப்பாளராக நான் செயற்பட்டு வருவதுடன் அதன் செயலாளராக பிரபல சட்டத்தரணி நிஸ்ஸங்க நாணயக்கார செயற்படவுள்ளார்.
அரசியல் தேவைப்பாட்டுக்காக செயற்பட்டு வரும் பொலிஸ் அதிகாரிகளிடமிருந்து மக்களைப் பாதுகாத்தல், அவ்வாறான நடவடிக்கைகள் தொடர்பாக ஆராய்ந்து அறிக்கைகளைச் சமர்ப்பித்தல், அரசியல்வாதிகளிடம் அடிபணியாது செயற்பட்டு வரும் அதிகா?களுக்கு ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் குறித்து நடவடிக்கை எடுத்தல், மற்றும் பொலிஸ் திணைக்களத்தின் கீர்த்தியைப் பாதுகாத்தல் போன்ற நான்கு பிரதான காரணங்களை உள்ளடக்கியே இந்த பொதுமக்கள் பாதுகாப்பு கண்காணிப்புக் குழுவினை உருவாக்கியுள்ளோம்.
இதேவேளை பொலிஸ்மா அதிபராக நியமிக்கப்படுவோர் அவர்களது சேவைக்கா லம் முடிந்து ஓய்வு பெற்றதன் பின்னர் அரசியலிலோ அல்லது அரசாங்கத்தின் ஏதாவது ஒரு சேவையிலோ இணைந்து சேவையாற்றி வருகின்றனர். அந்த வகையில் இலங்கையின் 30ஆவது பொலிஸ்மா அதிபராக நியமிக்கப்பட்டிருந்த விக்டர் பெரேரா தற்போது ஆளுனராக பொறுப்பேற்கவுள்ளார்.
அரசாங்கத்துக்கும் அதிலுள்ள சில அரசியல்வாதிகளுக்கும் அடிபணிந்து செயற்பட்டு வருகின்றவர்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் வழங்கி அவர்களுக்கான சலுகைகளை அரசாங்கம் வழங்கி வருகின்றது.
நேற்று முன்தினம் காலை 31ஆவது பொலிஸ்மா அதிபராக புதிதாக நியமிக்கப்பட்ட ஜயந்த விக்கிரமரட்ண தமது கடமைகளைப் பொறுப்பேற்ற வேளை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாடு ஒன்றின் போது கடத்தல்களில் ஈடுபடுத்தப்பட்டு வரும் வெள்ளை வானை தானும் பார்க்க ஆவலாக உள்ளதாக தெரிவித்திருந்தார்.
கடந்த சில காலங்களாகவே வெள்ளை வான் ஆயுததாரிகளால் நபர்கள் கடத்தப்பட்டு வரும் சம்பவம் இடம்பெற்றுக் கொண்டே வருகின்றது. இதற்குரிய நடவடிக்கைகளை எடுக்கவுள்ளதாக தெரிவிக்க வேண்டிய பொறுப்புமிக்க அதிகாரி ஒருவர் இவ்வாறானதொரு கருத்தை தெரிவித்திருப்பதை நாம் கண்டிக்கின்றோம்.
இதேவேளை நேற்று முன்தினம் அம்பாறை அறுகம்பை பாலத்தின் திறப்பு விழாவில் கலந்துகொண்ட ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்திற்கு எதிராகச் செயற்பட்டு வரும் சில சக்திகளே ஊடகங்கள் மீதும் ஊடகவியலாளர்கள் மீதும் தாக்குதல்களை நடத்துகின்றன என்று தெரிவித்திருந்தார்.
இவ்வாறு அவர் கூறும் அரசாங்கத்திற்கு எதிரான சில சக்திகள் தம்முடனேயே இணைந்திருப்பதனை அவர் ஏன் இன்னும் புரிந்து கொள்ளவில்லை என்பதே எமது கேள்வியாகும். ரூபவாஹினிக் கூட்டுத் தாபன ஊழியர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலும் அரசாங்கத்திற்கு எதிரான சக்திகளே மேற்கொண்டனவா என்று ஜனாதிபதி கருதுகின்றாரா? இது குறித்து உரிய விளக்கம் அளிக்கப்பட வேண்டும்.
Wednesday, 2 July 2008
வெள்ளை வான் விபரங்களை வெளியிட நாம் தயார் சட்டத்தின் முன் நிறுத்த பொலிஸ்மா அதிபர் தயாரா?
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment