Sunday, 13 July 2008

ஜே.வி.பி.யின் உயர் மட்டக்குழு சீனா விஜயம்

சீன கம்யூனிஸ்ட் கட்சியுடனான உறவுகளை வலப்படுத்திக் கொள்ளும் நோக்கத்துடன் ஜே.வி.பி.யின் உயர் மட்டக்குழு ஒன்று சீனாவுக்கான விஜயம் ஒன்றை மேற்கொண்டிருக்கின்றது.

ஜே.வி.பி.யின் மத்திய குழு உறுப்பினர் சுனில் ஹன்டுனட்டி தலைமையிலான இக்குழுவினர் சீனக் கம்யூனிஸ்ட் கட்சிப் பிரமுகர்களுடன் முக்கியமான பேச்சுக்களை மேற்கொண்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீனாவின் யுனான் மாகாணத்தக்கு விஜயம் செய்ய ஜே.வி.பி. தூதுக்குழுவினர் மாகாணச் செயலாளர் லீ ஹன்பாய் என்பவருடன் விரிவான பேச்சுக்களை நடத்தி இருக்கின்றார்கள்.

இம்மாகாணத்தில் 25 வெவ்வேறான சமூகங்களைச் சேர்ந்தவர்கள் இருக்கின்ற போதிலும், அவர்கள் அனைவரும் சமாதானமாகவும் அமைதியாகவும் வாழ்ந்து வருவதாகவும். இதற்கு சோஷலிசக் கோட்பாடுகளே காரணம் எனவும் ஜே.வி.பி.யினருக்கு விளக்கப்பட்டது.

பல்வேறு சமூகங்களையும் சார்ந்தவர்களிடையே எவ்வாறு ஒருமைப்பாட்டையும் சமாதானத்தையும் ஏற்படுத்த முடியும் என்பதற்கு அங்கு தாம் கற்றுக்கொண்ட பாடத்தை தாயகத்தில் பிரயோகிக்கப்போவதாக ஜே.வி.பி.யினர் அங்கு தெரிவித்தனர்.

சீனாவின் கம்யூனிச அரசாங்கத்தின் கீழ் அந்த நாடு எவ்வாறு வளர்ச்சியடைந்தது என்பதை அறிந்தகொள்வதும், அந்நாட்டுக் கம்யூனிஸ்ட் கட்சியுடனான உறவுகளை வலுப்படுத்திக் கொள்வதும்தான் தம்முடைய விஜயத்தின் நோக்கம் என ஜே.வி.பி.யினர் தெரிவித்திருந்தனர்.

1 comment:

ttpian said...

JVP hair cut saloon!
free hair cut for communist bastards!
if it is tamil community they will do the tonsuring!