Sunday 6 April 2008

100வது நாய்க்கண்காட்சி: மே 9ல் துவக்கம்

தென்னிந்திய கென்னல் கிளப் சார்பில் நடத்தப்படும் 100வது ஆண்டு நாய்க் கண்காட்சி, ஊட்டியில் மே 9ம் தேதி துவங்கி தொடர்ந்து 3 நாட்கள் நடைபெற உள்ளது.

இதில் 50 ரகங்களை சேர்ந்த 500க்கும் அதிகமான நாய்கள் பங்கேற்க உள்ளதாகவும், அவற்றிற்கு 7 பிரிவுகளில் பல்வேறு போட்டிகள் நடத்தப்படும் என்றும் கென்னல் கிளப் தலைவர் கிருஷ்ணமூர்த்தி செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
இப்போட்டியில் சிறந்த நாய்களை தேர்ந்தெடுக்க சீனா, தைவான், மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளைச் சேர்ந்த 4 நடுவர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
கண்காட்சியின் முடிவில் முதல் 8 இடங்களை பிடிக்கும் நாய்களுக்கு வெள்ளிப் பதக்கமும், பரிசும் அளிக்கப்படும். இதேபோல் ஒவ்வொரு பிரிவிலும் முதலிடம் பெறும் நாய்க்கு அப்பிரிவில் பட்டம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோடை காலத்தில் நீலகிரி மாவட்டத்திற்கு வரும் சுற்றுலா பயணிகளை கவரவும், மகிழ்விக்கவும் அம்மாவட்ட நிர்வாகம் மற்றும் தனியார் சார்பில் நடத்தப்படும் கோடைகால நிகழ்ச்சிகளில், நாய்க்கண்காட்சி முக்கிய இடத்தை பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments: