Monday, 21 April 2008

அரசியல்வாதிகளை படுகொலை செய்ய 100 விடுதலைப் புலிகள் தோட்டப்புறங்களில் பதுங்கியுள்ளனர் - திவயின

கொழும்பு மற்றும் சனநெசரில் மிக்க பகுதிகளில் வசிக்கும் பிரபுக்கள் அரசியல்வாதிகளை படுகொலை செய்யும் நோக்குடன் விசேட பயிற்சி பெற்ற 100 தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்கள் தோட்டப்புறங்களில் தங்கியுள்ளதாகத் தெரியவருகிறது.
இவர்களில் அனேகமானோர் தோட்டப்புறங்களில் வசிப்போர் எனவும் அவர்கள் வன்னிக்குச் சென்று விசேட பயிற்சிப் பெற்று திரும்பியிருப்பதாகவும் தெரியவருகிறது.

மாத்தளை மற்றும் நுவரெலியா பிரதேசங்களில் கைது செய்யப்பட்ட முக்கிய விடுதலைப் புலிகளிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் மூலம் இந்த விடயங்கள் தெரியவந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

சுலபமாக கொழும்பிற்கு வரக்கூடிய வாய்ப்பு உள்ளதால் புலி உறுப்பினர்கள் தோட்டப்புறங்களில் பதுங்கியிருப்பதாக பொலிஸ் புலனாய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன என திவயின செய்தி வெளியிட்டுள்ளது.

No comments: