Monday, 21 April 2008

பாக். மூன்றே நாளில் 2-ம் முறையாக ஏவுகணை சோதனை-(வீடியோ இணைப்பு)

அணு ஆயுதங்களை நெடுந்தூரம் தாங்கிச் சென்று தாக்கவல்ல ஏவுகணையை, பாகிஸ்தான் இன்று சோதனை செய்தது. இது, குறிப்பாக இந்தியாவிற்குள் உள்ள இலக்குகளை குறிவைத்துத் தாக்குதல் நடத்தக் கூடிய திறன் பொருந்தியதாகும்.

கடந்த மூன்று நாட்களில் இரண்டாவது முறையாக பாகிஸ்தான் ஏவுகணை சோதனை மேற்கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

இதுதொடர்பாக பாகிஸ்தான் ராணுவம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், 'ஷாகீன் - 2' அலல்து 'ஹத்ஃப் - VI' என்றழைக்கப்படும் அணு ஆயுதங்களை ஏற்றிக் கொண்டு சுமார் 2000 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இலக்கை துல்லியமாக தாக்கும் திறன் கொண்ட ஏவுகணை சோதனை , முதன்முறையாக ராணுவப் போர் படையால் மேற்கொள்ளப்பட்டது என்று குறிப்பிட்டுள்ளது.

இதற்கு, முந்தைய சோதனைகள் யாவும் ராணுவ விஞ்ஞானிகள் மற்றும் பொறியாளர்களால் மேற்கொள்ளப்பட்டதாகும்.

இந்த ஏவுகணை சோதனை, பாகிஸ்தான் கப்பற்படை தலைவர் அட்மிரல் முகமது அஃபல் தஹிர் மற்றும் உயர் ராணுவ அதிகாரிகள் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டது.

அதேநேரத்தில், ஏவுகணை சோதனை மேற்கொள்ளப்பட்ட இடம் குறித்த தகவல்கள் அந்த அறிக்கையில் குறிப்பிடப்படவில்லை.

முன்னதாக, ஒட்டுமொத்த தொழில்நுட்பத் திறனை மேம்படுத்தும் வகையில் கடந்த சனிக்கிழமையன்று ஏவுகணை சோதனை மேற்கொள்ளப்பட்டதாக பாகிஸ்தான் ராணுவம் தெரிவித்துள்ளது.

No comments: