Friday, 18 April 2008

கண்டி: பன்வில காவல்துறை பிரிவில் 11 பேர் கைது.

கண்டி மாவட்டம் பன்வில காவல்துறை பிரிவில் 11 பேர் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பன்வில காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்தப் பிரதேசத்தில் மவுஸ்ஸாவ, ரேல்கஸ்யாய கெலாபொக்க, ஆகிய பகுதிகளில் உள்ள இரண்டு மின்மாற்றிகள் கடந்த 16ஆம் திகதி தகர்க்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.

இவர்கள் பன்வில பிரதேசத்திற்குள் புதிதாக பிரவேசித்தவர்கள் குறித்து அறிய இன்று (18-04) தேடுதல்களை மேற்கொண்டனர். இதன் போது தமது அடையாளத்தை உறுதிப்படுத்த முடியாத நிலையில் இவர்கள் கைதுசெய்யப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

பன்வில காவல்துறை பிரிவில் மலையக தேயிலை தோட்டங்கள் அமைந்துள்ளன, இந்த தோட்டங்களில் அதிகளவில் தமிழ் மக்கள் வாழ்ந்து வருகின்றமை குறிப்பிடதக்கது.

No comments: