Friday, 18 April 2008

கிழக்கு பிரச்சாரம் - உலங்கு வானூர்தி வழங்க அரசாங்கம் மறுப்பு: ஐதே.க

கிழக்குத் தேர்தல் பிரசார நடவடிக்கைகளில் கலந்து கொள்வதற்காக எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கவிற்கு உலங்கு வானூர்தி ஒன்றை வழங்குமாறு விடுக்கப்பட்ட கோரிக்கையை பாதுகாப்பு அமைச்சு நிராகரித்துள்ளது.

கிழக்குத் தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்கு, பாதுகாப்பாகச் செல்ல விமானப்படையினரின் உலங்கு வானூர்தி ஒன்றை வழங்குமாறு ஜனாதிபதியிடம் தாம் கோரியிருந்ததாகவும், குறித்த பயணங்களுக்கு பணம் செலுத்துவதாகக் கூறியே கோரியதாகவும் எனினும், பாதுகாப்பு அமைச்சின் மேஜர் ஜெனரல் பெர்னாண்டோ என்பவர் எதிர்க்கட்சித் தலைவருக்கு ஹெலிகொப்டரை வழங்க முடியாது என அறிவித்துள்ளார் எனவும் ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் ருக்மன் சேனாநாயக்க எமக்குத் தெரிவித்தார்.

தற்போது சாதாரண அமைச்சர்களின் மனைவிமார் மற்றும் குழந்தைகள் எங்காவது செல்ல வேண்டியேற்பட்டாலும் உலங்கு வானூர்திகள் வழங்கப்படுகிறது.

எனினும், எதிர்க்கட்சித் தலைவர் விடுத்த வேண்டுகோளை பாதுகாப்பு அமைச்சு நிராகரித்துள்ளது. இதன் மூலம் கிழக்குத் தேர்தல்கள் தொடர்பாக அரசாங்கம் மிகவும் குழப்பமடைந்துள்ளமை தெளிவாகிறது என அவர் தெரிவித்துள்ளார்.

No comments: