ஜே.வீ.பீயின் உள்ளக கருத்து முரண்பாடுகள் காரணமாக அதில் இருந்து பிளவுப்படடுள்ள வீரவன்ஸ தரப்பினர் மீது சோமவன்ஸ தரப்பினரால் மேற்கொள்ளப்படும் இடையூறுகள், கடத்தல்கள் என்பன விமல் வீரவன்ஸ செயலாளராக உள்ள தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் வரை பரவியுள்ளது.
தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் களுத்துறை மாவட்ட செயலாளர் ஹேமன் பெரேரா பண்டாரகம பிரதேசத்தில் வைத்து சோமவன்ஸ தரப்பினரால் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதை அடுத்து வீரவன்ஸ தரப்பு மீதான இரண்டாம் கட்ட தாக்குதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
தாக்குதலுக்கு உள்ளான பெரேரா பண்டாரகம காவல்துறையினரிடம் முறையிட்டுள்ளதுடன் பண்டாரகம வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார். மேல் மாகாண சபையின் ஜே.வீ.பீ உறுப்பினர் அஜீத் அனுர உடன் பேச்சுவார்த்தை நடத்தி கொண்டிருந்த போது அவரது தொலைபேசிக்கு சில அழைப்புகள் வந்ததாகவும் இதனையடுத்து 15 நிமிட நேரத்திற்கு பின்னர் மோட்டார் சைக்களில் 8 பேர் தாம் இருந்த இடத்திற்கு வந்தாகவும் அவர்கள் ஜே.வீ.பீயின் பிரச்சனைகள் தொடர்பில் வாக்குவாத்தில் ஈடுபட்டதாகவும் அதன் போது அவர்களில் ஒருவர் தன்னிடம் இருந்து தலைகவசத்தின் மூலம் தனது தலையில் தாக்கியதுடன் ஏனையோர் தடி மற்றும் கால்களினால் தன்னை தாக்கினர் என்றும் பெரேரா தெரிவித்துள்ளார்.
1986ஆம் முதல் ஜே.வீ.பீயின் வர்த்தக ஆதரவாளராக இருந்ததுடன் 1989ஆண்டு உயிர் பாதுகாப்பு கருதி பிரான்ஸ் சென்றதாகவும் அவர் குறிப்பிட்டார். அங்கிருந்தவாறு ஜே.வீ.பீயின் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்ததுடன் ஜே.வீ.பீக்கு பல உதவிகளை செய்துள்ளதாகவும் அவர் கூறினார்.
எனினும் தான் ஜே.வீ.பீயின் உறுப்பினர் அல்ல என்றும் அவர் குறிப்பிட்டார். இந்த தாக்குதல் தொடர்பாக கண்டன அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவர் கலாநிதி குணதாச அமரசேகர ஜே.வீ.பீயினரின் இவ்வாறான நடத்தைகளை தவிர்க்க வேண்டியது புத்திசாலிதனமான தலைமைத்துவத்தின் பொறுப்பு என கூறியுள்ளார்.
இவ்வாறான நடவடிக்கைகளை தவிர்க்குமாறு அவர் ஜே.வீ.பீயின் உறுப்பினர்களிடம் கேட்டுள்ளார்.
Friday, 18 April 2008
தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் இரண்டாகப்பிளவு!!!!!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment