Friday, 18 April 2008

புலிகளின் விசேட தாக்குதல் அணிகள் தெற்கில் முக்கிய தளங்களை சமகாலத்தில் தாக்க உள்நுளைந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

தமிழீழ விடுதலைப் புலிகளின் மூன்று தாக்குதல் அணிகள் கொழும்பிலும் தெற்கிலும் ஊடுருவியுள்தாக வெளிநாட்டு புலனாய்வு பிரிவு ஸ்ரீலங்கா அரசாங்கத்தை எச்சரிததிருப்பதாக கொழும்பு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

விடுதலைப் புலிகளின் 80 சிறப்பு பயிற்சி பெற்ற போராளிகள் மூன்று தளபதிகளின் கீழ் தெற்கில் ஊடுருவியுள்ளதாகவும் இவர்கள் முக்கிய இலக்குகள் மீது சமகாலத்தில் தாக்குதல் நடத்தக் கூடும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வடக்கில் இடம்பெற்று வரும் மோதல்களில் ஈடுபடுத்துவதற்காக ஸ்ரீலங்காவின் முக்கிய படையணிகள் வடக்கு பேபர் முனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் கொழும்பிலும் நாட்டின் ஏனைய பாகங்களிலும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டள்ளவர்கள் விடுதலைப் புலிகளின் தாக்குதல்களை முறியடிக்கும் திறனற்றவர்கள் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

No comments: