Sunday, 6 April 2008

நடிகர் சத்யராஜ் உருவ பொம்மை எரிப்பு ரஜினி ரசிகர்கள் 12 பேர் கைது

ஒகேனக்கல் குடிநீர் திட்டத்துக்காக சென்னையில் நடிகர்-நடிகைகள் நடத்திய உண்ணாவிரத போராட்டத்தின் போது நடிகர் சத்யராஜ் பேசும்போது, தமிழ்நாட்டில் முருகன் போன்ற கடவுள் இருக்கும் போது ஏன் வடநாட்டை சேர்ந்த ராகவேந்திரரை வணங்க வேண்டும் என்று பேசினார். அந்த பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து அருப்புக்கோட்டை ரஜினிகாந்த் ரசிகர்கள் பந்தல்குடி ரோட்டில் ஒன்று திரண்டனர். அப்போது சத்யராஜை கண்டித்து கோஷம் போட்டனர்.

பின்னர் சத்யராஜ், எடிïரப்பா, வாட்டாள் நாகராஜ் ஆகியோரின் உருவபொம்மைகளை தீ வைத்து கொழுத்தினர். தகவல் அறிந்ததும் அருப்புக்கோட்டை போலீசார் விரைந்து சென்று ரஜினிகாந்த் ரசிகர்கள் 12 பேரை கைது செய்தனர்.

இதேபோல சத்யராஜை கண்டித்து மானாமதுரை பகுதியில் ரஜினி ரசிகர்கள் கண்டன சுவரொட்டி ஒட்டியுள்ளனர்.

2 comments:

துரை said...

"நடிகர் சத்யராஜ் உருவ பொம்மை எரிப்பு ரஜினி ரசிகர்கள் 12 பேர் கைது"
இது தேவைதானா, அப்படி என்ன சத்யராஜ் சொல்லிடாரு, தமிழ்நாட்டில் முருகன் போன்ற கடவுள் இருக்கும் போது ஏன் வடநாட்டை சேர்ந்த ராகவேந்திரரை வணங்க வேண்டும்?
இதில் என்ன தவறு இருக்கிறது, நாம பேசுற மொழி என்னவென்று தெரியாத கடவுளை வணங்குவதைவிட நம் தாய் மொழியாம் தமிழ் மொழியை ஒன்றிய முருகன் போன்ற கடவுளை வணங்குவதில் தவறு ஒன்றும் இல்லை

Ramanc said...

இப்படியான முட்டாள் தனமான வேலைகளால் தமிழ்நாடு இழந்தது நிறையவே. ஒரு போரட்டம் என்று வந்துவிட்டால் எல்லா தமிழ்நாட்டுகாரர்காளும் ஒன்றாகிவிடவேண்டும். அதைவிட்டுட்டு
ஒருதருக்கு ஜால்ர அடிப்பது சுயநலப்புத்தி.