Sunday, 6 April 2008

லண்டனில் ஒலிம்பிக் ஜோதி ஊர்வலத்தின் போது ஆர்ப்பாட்டங்கள்ு(வீடியோ இணைப்பு)

லண்டன் நகர வீதிகளில் நடந்த ஒலிம்பிக் ஜோதி ஊர்வல நிகழ்ச்சி
திபெத்தில் சீனாவின் செயற்பாடுகளைக் கண்டிக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களின் நடவடிக்கைளால் இடர்களைச் சந்தித்தது.

இன்னும் நாலு மாதத்தில் பீஜிங்கில் ஆரம்பிக்கவுள்ள ஒலிம்பிக் போட்டிக்குக் கட்டியமாக இந்த ஜோதி ஊர்வலம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால் அது சீனாவின் மனித உரிமை பேணும் தரத்தைக் கண்டித்துக் குரலெழுப்வோரின் ஆர்பாட்டத்துக்கு மையமாகிவிட்டது.

ஜோதி ஊர்வலமாகக் கொண்டு வரப்பட்ட சமயத்தில் அதைப் பறிக்கும் முயற்சிகள் சில இடங்களில் நடந்தது.சுமார் முப்பது ஆர்ப்பாட்டக்காரரைப் போலீசார் கைது செய்துள்ளனர்.

லண்டனில் உள்ள சீனா டவுன் பகுதிக்கு பிரிட்டனுக்கான சீனத் தூதுவர் அந்த ஜோதியைக் கொண்டு சென்றார்.

பிரதமர் கார்டன் பிரவுன் அவர்கள் தமது வீடுள்ள டவுனிங் ஸ்டீரிடில் வைத்து அந்த ஜோதியை வரவேற்றார். சீனக் கொடிகள் தாங்கிய சீனர் பலர் பிரபல ட்ரஃபல்கர் சதுக்கத்தில் அதனை வரவேற்றனர்.

No comments: