உணவுப் பொருட்களுக்கான விலையேற்றம் மற்றும் உணவுத் தட்டுப்பாடு என்பவற்றினால் பாதிக்கப்பட்ட மிக மோசமான நாடுகளில் இலங்கையும் உள்ளடங்குவதாக அறிக்கையிடப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் அமைப்பின் இணை நிறுவனமான உணவு விவசாய நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வருடத்தில் உக்கிர உணவுத் தட்டுப்பாட்டை எதிர்நோக்கும் 14 நாடுகளில் இலங்கையும் ஒன்று என ஐக்கிய நாடுகளின் உணவு விவசாய அமைப்பு தெரிவித்துள்ளது. செனகல், நைஜீரியா, சேமாலியா, சூடான், உகண்டா, எதியோபியா, மொசம்பக், பிலிப்பீன்ஸ், பங்களாதேஸ், தஜூகிஸ்தான், ஆர்மானியா, ஹெய்;ட்டி ஆகிய நாடுகள் உணவுத்தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள ஏனைய நாடுகள் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த வருடத்துடன் ஒப்பிடும் போது இலங்கையின் அரிசி விலை இரண்டு மடங்காக அதிகரித்துள்ளதாகவும், மக்கள் பல்வேறு சிக்கல்களை எதிர்நோக்கி வருவதாகவும் ஐக்கிய நாடுகள் அமைப்பின் இணைநிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Tuesday, 15 April 2008
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
But No: 1 in human right violations!
Post a Comment