கடந்த வாரம் சிறிலங்கா இராணுவத்தளபதிகள், ஈழப்போர் இதுவரைகண்டிராத மாபெரும் யுத்தமுனை ஒன்றை திறக்கப்போவதாக பீற்றியிருந்தனர்.
தற்போது வரும் சில இராணுவத்தினரின் தகவல்களின்படி உயிர் இழந்த இராணுவத்தினரின் எண்ணிக்கை 165, அத்துடன் காணாமல் போனவர்கள் 33 எனவும் தெரியகருகின்றது. காணாமல் போனவர்களையும் படுகாயம் அடைந்து உயிர் ஊசலாடும் படையினரையும் கணிப்பிட்டால் இராணுவ இழப்பு 200ஐ விரைவில் தாண்டும் என எதிர் பார்க்கப்படுகின்றது.
இதே பாணியில் முகமாலையில் இராணுவம் அடிவாங்கியது இது மூன்றாம் முறை என அவதானிகளும் முன்னால் இராணுவத்தளபதிகளும் கூறியுள்ளனர். தீச்சுவாலை, அக்டேபர் 2006,ஏப்பிரல் 2008 என்பனவற்றையே இவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
2006 அக்டோபரில் ஆனையிறவை நோக்கி வெளிக்கிட்டு முகமாலையில் முடங்கினர். பின்னர் மடுவில் எதிர்பார்த்த பலன் கிடைக்கவில்லை என மணலாற்றில் தொடங்கினர். அதுவும் அப்படி இப்படி பிசக மீண்டும் முகமாலையில் தொடங்கினர்.
மூன்று முனைகளிலும் முன்னேற முடியாத இராணுவம் தற்போது மூன்றாம் முறையும் முகமாலையில் தோற்றும் உள்ளது.
No comments:
Post a Comment