ஈராக்கில் இன்று மனித வெடிகுண்டு நடத்திய தற்கொலை தாக்குதலில் 50 பேர் பலியாயினர்.
தலைநகர் பாக்தாத்தின் வடக்கு நகர் பகுதியில் , அல் - காய்தாவுக்கு எதிரான சன்னி பழங்குடியினத்தைச் சேர்ந்த சகோதரர்கள் இரண்டு பேரது இறுதி ஊர்வலம் இன்று நடைபெற்றது.
இதில் ஊடுருவிய மனித வெடிகுண்டு தற்கொலை தாக்குதல் தீவிரவாதி ஒருவன் , தான் கட்டியிருந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்ததில் , 50 பேர் உடல் சிதறி பலியாயினர்.
சன்னி ஆதரவாளர்களிடையே அமெரிக்க படையினர் கவுன்சிலிங் மூலம் , அவர்களிடத்தில் மனமாற்றத்தை ஏற்படுத்தியதை தொடர்ந்து , சன்னி பிரிவைச் சேர்ந்த ஏராளமனோர் அமெரிக்க படையில் சேர்ந்து வருகின்றனர்.
அவ்வாறு சேரும் சன்னி பிரிவினர் அல் - காய்தா தீவிரவாதிகளுக்கு எதிராக போராடி வருவகின்றனர்.இதனால் ஆத்திரமுற்றே அல் - காய்தா தீவிரவாதிகள் சன்னி பிரிவினரை குறி வைத்து தாக்குதல் நடத்தி வருவதாக கூறப்படுகிறது.
Thursday, 17 April 2008
ஈராக்கில் மனித வெடிகுண்டு தாக்குதலில் 50 பேர் பலி-(வீடிடயோ இணைப்பு)
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment