Thursday, 17 April 2008

இன்டர்நெட் பழக்கம் விபரீதத்தில் முடிந்தது : விபசார அழகியின் திடுக்கிடும் பின்னணி

சென்னை: சென்னை தொழில் அதிபரை, பல வகையிலும் ஏமாற்றிய ஐதராபாத் விபசார அழகி குறித்து பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. தொழில் அதிபர் கொடுத்த புகாரின் பேரில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டவர், ஆண் நண்பர்கள் மூலம், ஜாமீன் பெற்று விட்டார்.சென்னை அண்ணாநகர், கிழக்கு நான்காவது தெருவைச் சேர்ந்தவர் தொழில் அதிபர் சுகுமார் ஜார்ஜ்; திருமணமானவர். மனைவி மற்றும் குடும்பத்தார் ஆஸ்திரேலியாவில் உள்ளனர். சென்னையில் தனியாக வசித்த சுகுமார் ஜார்ஜ், "ஸ்கை ஹோம் பில்டர்ஸ்' என்ற கட்டுமான நிறுவனம் நடத்தி வருகிறார்.


ஐதராபாத்தைச் சேர்ந்தவர் மாடலிங் அழகி சிமி குமார். இன்டர்நெட்டில், "சாட்டிங்' செய்யும் போது சிமி குமாரின் நட்பு, சுகுமார் ஜார்ஜுக்கு கிடைத்தது. சிமி குமார், தன்னை பற்றி, "மிசஸ் ஐதராபாத்' பட்டம் பெற்றவள்; கணவரை பிரிந்து வாழ்கிறேன். 15 வயதில் மகள் உள்ளார்' என, தெரிவித்துள்ளார். இதன் பிறகு, சிமி குமார், சுகுமார் ஜார்ஜ் சந்திப்பு சென்னையில் நடந்தது. சுகுமார் ஜார்ஜுடன் அன்பாக பழகினார் சிமி குமார். அண்ணாநகர் வீட்டில் தங்கி, வேண்டிய உதவிகளை செய்தார். கட்டுமான நிறுவனத்திலும் பணியாற்றினார். ஓராண்டு பழக்கத்துக்கு பிறகு, 2006ம் ஆண்டு, திருமணம் செய்து கொள்ள, இருவரும் முடிவு செய்தனர்.




சொத்துகளை எழுதி வையுங்கள்: "திருமணத்தை, ஐதராபாத்தில் நடத்த வேண்டும்' என, நிபந்தனை விதித்தார் சிமி குமார். நெருக்கமான உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் விமானம் மூலம் ஐதராபாத் சென்றார் சுகுமார் ஜார்ஜ்; திருமணமும் நடந்தது. நட்சத்திர ஓட்டலில் இருவரும் தங்கினர்.காலை 5 மணிக்கு எழுந்த சிமி குமார், "செல்ல நாய்க்கு உடம்பு சரியில்லை. அதை, மகனாக வளர்த்து வருகிறேன். உடனே வீட்டிற்கு செல்ல வேண்டும்' என கூறி விட்டு சென்றார். பல மணி நேரம் ஆகியும் அவர் ஓட்டலுக்கு வரவில்லை. சிமி குமாரின் மொபைல் போனுக்கு தொடர்பு கொண்டார் சுகுமார் ஜார்ஜ். அப்போது சிமிகுமார், "ஏற்கனவே திருமணமான உங்களுக்கு வயதாகி விட்டது. எனது எதிர்காலத்தை நினைத்து பயப்படுகிறேன்.




எனது பெயரில், ஒரு கோடி ரூபாய் மதிப்புக்கு சொத்துகளை எழுதி வையுங்கள்' என பேசி அதிர்ச்சி கொடுத்தார்.தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த சுகுமார் ஜார்ஜ், உறவினர்களுடன் சென்னை திரும்பினார். தொடர்ந்து சென்னைக்கு வரும்படி சிமி குமாருக்கு பல முறை அழைப்பு விடுத்தார். ஆனால், சிமி குமாருக்கு, சுகுமார் ஜார்ஜ் பெயரில் இருந்த பல கோடி ரூபாய் சொத்துக்கள் மீது தான் ஆர்வம் இருந்தது. சேர்ந்து வாழ மறுத்தார்.




நிரந்தரமாக பிரிய முடிவு: சேர்ந்து வாழ்ந்தால் தான் சொத்து தருவேன் என்பதில், சுகுமார் ஜார்ஜ் உறுதியாக இருந்தார்.அதனால் இறங்கி வந்த சிமி குமார், "ஐதராபாத் வந்து என்னுடன் தங்குங்கள்' என, அழைப்பு விடுத்தார். இதை நம்பிய சுகுமார் ஜார்ஜ், ஐதராபாத் சென்றார்; மாதம் ரூ.40 ஆயிரம் வாடகைக்கு வீடு பிடித்து தங்கினார். சொத்து கேட்டு சிமிகுமார் கொடுத்த தொந்தரவால் சில நாட்களில், சுகுமார் ஜார்ஜ் சென்னை திரும்பினார். ஐதராபாத் வாடகை வீட்டில் சிமி குமார் தங்கினார்.இந்த வீடு, ஐ.ஏ.எஸ்., அதிகாரிக்கு சொந்தமானது. அந்த வீட்டுக்கு அடிக்கடி வாலிபர்கள் வருவதை, அதிகாரி அறிந்தார். உடன், சுகுமார் ஜார்ஜுக்கு அவர் எழுதிய கடிதத்தில், "உங்கள் மனைவியுடன் பல வாலிபர்கள் தங்கி செல்கின்றனர். வீட்டில் விபசாரம் நடப்பதாக சந்தேகிக்கிறேன். உடனடியாக வீட்டை காலி செய்து, மனைவியை அழைத்துச் செல்லுங்கள்' என எழுதப்பட்டு இருந்தது.இதனால் அதிர்ச்சியடைந்த சுகுமார் ஜார்ஜ், சிமி குமாரிடம் இருந்து நிரந்தரமாக பிரிய முடிவு செய்தார். அவர் வெளிநாடு சென்றிருந்த போது, சென்னைக்கு வந்தார் சிமி குமார். ஏற்கனவே அண்ணா நகர் வீட்டில் ஓராண்டு தங்கி இருந்ததால், வீட்டு வேலையாட்கள் சிமி குமாரை அன்புடன் வரவேற்றனர். வீட்டில் இருந்த," பர்னிச்சர்'கள் மற்றும் பொருட்களை, லாரி மூலம், ஐதராபாத் கொண்டு சென்று விட்டார் சிமி குமார்.

No comments: