சிறிலங்காவின் தலைநகர் கொழும்பின் புறநகர்ப் பகுதியான பிலியந்தலையில் உள்ள பேருந்து தரிப்பிடத்தில் இன்று மாலை குண்டு வெடித்ததில் 25 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 64 பேர் காயமடைந்துள்ளனர்.
இக்குண்டு வெடிப்புச் சம்பவம் இன்று வெள்ளிக்கிழமை மாலை 6:55 மணியளவில் நிகழ்ந்துள்ளதாக சிறிலங்காவின் பிரதி காவல்துறை மா அதிபர் இலங்கக்கோன் தெரிவித்துள்ளார்.
சிறிலங்கா போக்குவரத்துச் சபைக்குரிய பேருந்தின் உட்புறத்திலேயே இக்குண்டு வெடித்திருப்பதாகவும் அதிசக்தி வாய்ந்த இக்குண்டு வெடிப்பில் பலர் சிக்கியிருப்பதாகவும் தெரிகிறது.
பிலியந்தலையில் இருந்து ககபொல செல்வதற்காக பேருந்து தரிப்பிடத்தில் தரித்து நின்ற 61-4170 இலக்க பேருந்திற்கு உள்ளேயே குண்டு வெடித்ததாக தெரிவிக்கப்படுகிறது.
கொல்லப்பட்ட 25 பேரின் உடலங்கள் இதுவரை களுபோவில மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் 64 பேர் காயங்களுடன் கொண்டு வரப்பட்டுள்ளனர் என்றும் களுபோவில மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
அப்பகுதிக்கு பொதுமக்கள் செல்ல படையினர் தடைவிதித்துள்ளனர். அப்பகுதியில் கடும் பதற்றம் நிலவுகிறது என்று அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.
No comments:
Post a Comment