Thursday, 17 April 2008

9,550 ஆண்டுகளாக வளரும் உலகிலேயே வயதான மரம் சுவீடன் நாட்டில் உள்ளது.

உலகிலேயே மிகவும் வயதான மரம் சுவீடன் நாட்டில் தலர்னா மாகாணத்தில் உள்ள மலைப்பகுதியில் உள்ளது. இது ஒரு வகையான ஊசி இலை மரம் ஆகும்.

இந்த மரத்தை ஆய்வு செய்த லீப் குல்மன் என்ற பூகோளவியல் பேராசிரியர், இந்த மரத்தின் வயது 9,550 ஆண்டுகள் இருக்கும் என்றும், உலகத்திலேயே இதுதான் மிகவும் வயதான மரம் என்றும் கூறினார்.

மலைப்பகுதியில் பாறை மற்றும் புதர்களுக்கு இடையே பல்லாயிரம் ஆண்டுகளாக மாறுபட்ட தட்ப வெட்ப நிலையை தாங்கியபடி இந்த மரம் கம்பீரமாக வளர்ந்து நிற்கிறது.

இதுவரை, தென் அமெரிக்காவில் உள்ள 4 ஆயிரம் முதல் 5 ஆண்டுகள் வயதுள்ள பைன் மரங்கள் தான் உலகிலேயே வயதான மரங்களாக கருதப்பட்டு வந்தன.

No comments: