Sunday, 20 April 2008

பல அமைச்சர்களை படுகொலை செய்யத் திட்டம் -ajeevan.ch

அமைச்சர்கள், பிரதியமைச்சர் மற்றும் பொலிஸ் அதிகாரிகளை படுகொலை செய்ய தமிழீழ விடுதலைப் புலிகள் தீட்டிய திட்டம் அம்பலமாகியுள்ளது.

டி.எம்.ஜயரத்ன, மஹிந்தானந்த அலுத்கமகே, கெஹலிய ரம்புக்வெல்ல, நவீன் திஸாநாயக்க ஆகிய அமைச்சர்கள், முன்னாள் பாதுகாப்புப் பிரதியமைச்சர் அனுரத்த ரத்வத்தே மற்றும் நுவரெலிய குற்றத்தடுப்புப் பிரிவு பொறுப்பதிகாரிகளாக கடமையாற்றிய போவெல, பொன்சேகா ஆகியோரை படுகொலைச் செய்ய தமிழீழ விடுதலைப் புலிகள் திட்டமிட்டிருந்ததாகத் தெரியவருகிறது.

ஜனாதிபதி உள்ளிட்ட பிரபுக்கள் நுவரெலியாவிற்கு வருகை தரும் போது ஹெலிகொப்டர் எங்கு தரையிறக்கப்படுகிறது என்பது குறித்த வீடியோ காட்சிகள் வன்னிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக லக்பிம தெரிவிக்கின்றது.

அண்மையில் திகனவில் வைத்து வெடிபொருட்களுடன் கைது செய்யப்பட்ட தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர் இந்தத் தகவல்களை தெரிவித்துள்ளார்.

No comments: