வடக்கில் படையினர் தமது தாக்குதல்களை தொடர்ந்தும் முன்னெடுத்து வருகின்ற நிலையில் தமிழீழ விடுதலைப்புலிகளின் பல்வேறு வகையிலான உத்திகள் படைத்தரப்புக்கு சவால்களை கொண்டு வந்துள்ளதாக சண்டே டைம்ஸ் தமது பாதுகாப்பு கட்டுரையில் தெரிவித்துள்ளது.
வடக்கில் மன்னாரிலும் யாழ்ப்பாணத்திலும் மணலாற்றிலும் மோதல்கள் தொடர்கின்றன. அவை தொடர்ந்தும் இடம்பெறப்போவதும் உறுதி. இந்தநிலையில் எதிhபாராத மழை சூழ்ந்த காலநிலை படையினருக்கு பாரிய பின்னடைவையும் தந்துள்ளதாக படைத்தரப்புகள் முன்னர் சுட்டிக்காட்டியிருந்தன.
இந்தநிலையில் கிழக்கு மாகாணத்தேர்தல் மற்றும் மத்திய மாகாணத்தில் தமிழீழ விடுதலைப்புலிகளின் செயற்பாடுகள் படைத்தரப்புக்கும் அரசாங்கத்தி;ற்கும் பாரிய பிரச்சினையை ஏற்படுத்தியுள்ளன.
கிழக்கு மாகாணசபைத்தேர்தலின் போது அரசியல்வாதிகளின் மீது தமிழீழ விடுதலைப்புலிகள் தாக்குதல்களை நடத்தலாம் என்ற அச்சத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.
எதிர்வரும் மே தின நிகழ்வை அம்பாறை தெய்யத்தகண்டியவில் நடத்தப்போவதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. எனினும் இந்த பாதுகாப்பற்ற சூழ்நிலையில் இது சாத்தியமானதா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது இருப்பினும் கிழக்கு மாகாணசபைத்தேர்தலை மையமாகக்கொண்டு இந்த மேதின நிகழ்வை நடத்தியே தீரவேண்டும் என அரசாங்கம் உறுதியாக தெரிவித்துள்ளது.
சுமார் 30 ஆயிரம் பேரைத்திரட்டி இந்த மே தின நிகழ்வை நடத்தினால் அது மாகாணசபைத்தேர்தலுக்கான வெற்றிக்கு வழிகோலும் என அரசாங்கம் நம்புவதாக சண்டேடைம்ஸ் குறிப்பிட்டுள்ளது.
இந்தநேரத்தில் முன்னாள் அமைச்சர்களான லலித் அத்துலத்முதலி, காமினி திஸாநாயக்க, இராணுவ அதிகாரி லக்கி அஹங்கம, ஆகியோர் தேர்தல் பிரசாரங்களின் போது கொல்லப்பட்டமையை அந்த செய்திதாள் சுட்டிக்காட்டியுள்ளது.
இவங்றுடன் மத்திய மாகாணத்தில் அண்மைக்காலமாக நடத்தப்பட்ட தாக்குதல்கள் படைத்தரப்பில் தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளதை அடுத்து ஜனாதிபதி உடனடியாக அமுலுக்கு வரும் வகையி;ல் மேஜர் ஜெனரல் லோரண்ஸ் பெர்ணான்டோவை மத்திய மாகாணத்திற்கான கூட்டு பொறுப்பு தளபதியாக நியமித்துள்ளார்.
இவரின் கீழ் மத்திய மாகாணத்தின் அனைத்து படைநடவடிக்கைகளும் கொண்டு வரப்பட்டுள்ளன. அண்மையில் கண்டியில் இடம்பெற்ற மின்மற்றிகள் மீதான குண்டுதாக்குதல்கள், திகனையி;ல் கண்டுபிடிக்கப்பட்ட வெடிப்பொருட்கள் போன்ற சம்பவங்கள் மத்திய மாகாணத்தில் தமிழீழ விடுதலைப்புலிகளின் செயற்பாடுகள் அதிகரித்துள்ளமையை காட்டுகின்றன.
இது அங்குள்ள பொருளாதார இலக்குகளை பாதிக்கும் என்ற அச்சம் பாதுகாப்பு தரப்பில் ஏற்பட்டுள்ளதை அடுத்தே புதிய தளபதியின் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக சண்டே டைம்ஸ் தெரிவித்துள்ளது.
Sunday, 20 April 2008
விடுதலைப்புலிகளின் உத்திகள் - படைத்தரப்புக்கு சவால்?--சண்டே டைம்ஸ்
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment