பெய்ஜிங்கையும் ஷாங்காயையும் இணைக்கும் உயர் வேக இருப்புப் பாதையின் கட்டுமானம் தொடங்கியது என்று சீன தலைமையமைச்சர் வென்சியாபாவ் இன்று பெய்ஜிங்கில் அறிவித்தார்.

இவ்விருப்புப் பாதையின் நீளம், 1300 கிலோமீட்டராகும். மொத்த ஒதுக்கீடு, 22 ஆயிரத்து 90 கோடி யுவானை எட்டும். இது, உலகின் மிக நீளமான உயர்வேக இருப்புப் பாதையாக மாறும். தொடர்வண்டிகள் மணிக்கு 350 கிலோமீட்டர் செல்லக் கூடியதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. அப்போது, பெய்ஜிங்-ஷாங்காய் பயணம், தற்போதைய 10 மணி நேரத்திலிருந்து 5 மணி நேரமாகக் குறையும் என்று தெரிகிறது.
இவ்விருப்புப் பாதை நெறியில், பயணியர் மற்றும் சரக்கு போக்குவரத்து கையாளப்படும். பெய்ஜிங்-ஷாங்காய் இருப்புப் பாதை போக்குவரத்து ஆற்றலை இது அதகரிக்கும்.

1 comment:
everything is o.k-why the hell u r supplying arms&ammunitions to srilankan army?
the whole world is afraid of tamil community-because,they are going to emerge as the super power in the asian sub condinent!
Post a Comment