Saturday, 19 April 2008

தமிழகத்தில் மண்டையைப் பிளக்கும் வெயில்

தமிழகம் முழுவதும் கடும் வெயில் நிலவி வருகிறது. வெயிலின் அளவு பல நகரங்களிலும் 95 டிகிரிக்கு மேல் போய் விட்டது. சென்னையில் 100 டிகிரியை வெயில் நெருங்கிக் கொண்டிருக்கிறது.

தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக கடும் வெயில் அடித்து வருகிறது. சமீபத்தில் பெய்த தொடர் மழையைத் தொடர்ந்து கடும் வெயில் அடித்துக் கொண்டிருக்கிறது. காலை 6 மணிக்கே வெயில் ஆரம்பித்து விடுகிறது. மாலை 6 மணி வரையிலும் வெயில் குறைந்தபாடில்லை. காற்றும் சரியான அளவில் இல்லாததால் வீடுகளுக்குள்ளும் இருக்க முடியவில்லை.

பகல் நேரங்களில் வெயில் கொடுமை என்றால் இரவில் புழுக்கம் மக்களை வாட்டி வதைத்து வருகிறது.

பகல் நேரங்களில் சாலைகளில் நடந்து செல்லக் கூட முடியாத அளவுக்கு வெயில் வாட்டி எடுக்கிறது. மின்விசிறிகளால் ஒரு பயனும் இல்லை. காற்று வருவதில்லை. மாறாக வெப்பக் காற்றுதான் வறுத்தெடுக்கிறது.

நள்ளிரவுக்கு மேல்தான் சற்று வெப்பம் குறைந்து லேசான குளுமை ஏற்படுகிறது.

பல நகரங்களில் வெப்ப நிலை 95 டிகிரியைத் தாண்டி விட்டது. சென்னையில் 97 டிகிரி அளவுக்கு வெயில் அடிக்கிறது. நேற்று வெப்பம் மிகக் கடுமையாக இருந்தது.

இன்னும் ஓரிரு நாட்களில் வெயிலின் அளவு 100 டிகிரியைத் தொட்டு விடும் என்று தெரிகிறது. இப்போதே இப்படி வெயில் அடிப்பதால் கத்திரி காலத்தின்போது எப்படி இருக்குமோ என்ற அச்சத்தில் மக்கள் வியர்த்துப் போயுள்ளனர்.

எகிறும் இளநீர், நுங்கு, பதனீர் விலை

சுட்டெரிக்கும் வெயில் காரணமாக இளநீர், நுங்கு பதனீர் விலை உயர்ந்துள்ளது.

கோடை காலங்களில் இளநீர், நூங்கு, பதனீர், தார்பூசணி போன்றவகளை சாப்பிட்டு கோடை வெயிலின் தாக்கத்தை கட்டுப்படுத்துவது வழக்கம். ஆனால் எந்த ஆண்டும் இல்லாத வகையில் தென்மாவட்டத்தில் கடந்த மாதம் பெய்த புயல் மழையின் காரணமாக குளுமை ஏற்பட்ட போதிலும் தற்போது சித்திரை மாதத்தின் கத்தரி வெயில் அதிகாலை முதல் மாலை வரை சுட்டெரிக்க தொடங்கியுள்ளது.

சித்திரை மாதம் 21ம் தேதி (03-05-2008) முதல் அக்னி நட்சத்திரம் தொடங்குகிறது. தற்போதைய கத்தரி வெயிலின் கொடுமையால் ரூ.5க்கு விற்கும் இளநீர் விலை 8 முதல் 10 வரை விற்கப்படுகிறது. ரூ.1 க்கு விற்கப்பட்ட நூங்கு 1.50க்கும், ரூ.10க்கு விற்கப்பட்ட பதனீர் 20க்கும் விற்கப்பட்டு வருகிறது.

மேலும் எலுமிச்சை ஜீஸ் ரூ.3க்கு தண்ணீர் கலந்து விற்கப்பட்டு வருகிறது. புளியங்குடி மார்கெட்டில் எலுமிச்சைவரத்து குறைந்துள்ளதால் விலையும் அதிகரித்துள்ளது. அக்னி நட்சத்திரம் தொடங்க சில நாட்களே உள்ள நிலையில் அதைவிட கூடுதல் வெயில் வாட்டி வதைக்க தொடங்கியுள்ள நிலையில் மே 3 முதல் மே 28 வரை நீடிக்கும் அக்னி வெயிலை எப்படி

வெப்ப நிலை மிகக் கடுமையாக இருப்பதால் சில பகுதிகளில் வயிற்றுப் போக்கு, வாந்தி பேதி உள்ளிட்டவையும் காணப்படுகிறது. சில இடங்களில் அம்மை நோயின் தாக்குதலும் உள்ளது.

No comments: