ரஜினிகாந்த்தின் குசேலனில் கமல்ஹாசனும் திரிஷாவும் நடிக்கவில்லை என்று இயக்குநர் பி.வாசு தெளிவுபடுத்தியுள்ளார்.ரஜினிகாந்த் நடிக்கும் குசேலன் ஒரே நேரத்தில் தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகிறது.
பி.வாசு இயக்குகிறார். கே.பாலச்சந்தர் கேரளாவின் செவன் ஆர்ட்ஸ் ஆகியோர் இணைந்து தயாரிக்கின்றனர். படப்பிடிப்பு மும்முரமாக நடந்து வருகிறது. படத்தில் ஏகப்பட்ட நட்சத்திரங்கள் நடிக்கின்றனர். ரஜினிக்கு ஜோடியாக நயனதாரா நடிக்கிறார். இதுதவிர சினேகா திரிஷா மம்தா மோகன்தாஸ் உள்ளிட்டோர் இடம் பெறும் நடனம் படத்தில் உள்ளதாக கூறப்பட்டது.
ஆனால் இப்போது அந்தக் காட்சியில் திரிஷா இல்லையாம். இதை பி.வாசு உறுதிப்படுத்தியுள்ளார். அதேபோல கலைஞானி கமல்ஹாசனும் படத்தில் இருப்பார் என்று கூறப்பட்டது. ஆனால் கமலும் படத்தில் இல்லை என்று கூறியுள்ளார் வாசு.
கமல்ஹாசனும் திரிஷாவும் படத்தில் இல்லை என்று தெளிவாக கூறியிருக்கிறார் பி.வாசு.
இதற்கிடையே ரஜினிகாந்த் நயனதாரா சம்பந்தப்பட்ட ஒரு பாடல் காட்சி ராமோஜிராவ் பிலிம்சிட்டியில் சனிக்கிழமை முதல் படமாக்கப்படுகிறது. இதற்காக அங்கு மிகப்பெரிய அரங்கு அமைக்கப்பட்டுள்ளது. இங்கு பாடல் காட்சியை 10 நாட்கள் படமாக்குகிறார்கள்.
அதைத்தொடர்ந்து ஹகுசேலன்’ படத்தின் படப்பிடிப்ப கேரள மாநிலம் ஆலப்புழையில் நடைபெற இருக்கிறது. அதன்பிறகு ஹகுசேலன்’ பட குழுவினர் பொள்ளாச்சி செல்கிறார்கள்.

1 comment:
No Thrissa in Rajini film? then,how tamilnadu people will eat&sleep?
Pl.form a (TOKEN)* hungerstrike:
starting time:9 A.M
Closing time 3.59 P.M
*token can be exchanged for Ambur piriyani!
All thrissha rasihar manram
secretary:Mahindha
treasurer:Kothapaya
joint sec:Srilankan consulate(CHEAP)General,Chennai
Post a Comment