Saturday, 19 April 2008

யாழ் - திருமலை கப்பல் சேவை காலவரையறையின்றி இடை நிறுத்தம்

சிறிலங்கா இராணுவத்தினர் யாழ்ப்பாணத்திற்கான கப்பல் சேவையை சடுதியாக இடைநிறுத்தியுள்ளனர். பலாலி படைத்தள கட்டளைப்பீடம் ஞாயிறு முதல் கப்பல் சேவையை நிறுத்த உத்தரவு வழங்கியுள்ளது.

யாழ் அரச அதிபர். கே. கணேஸ் சனி மாலைவரை இது பற்றி உத்தியோக பூர்வ அறிவிப்பு எதனையும் விடவில்லை.

பாதுகாப்பு காரணங்களை காட்டியே இச்சேவை நிறுத்தப்பட்டள்ளது. ஏலவே தனிமைப்பட்டுள்ள குடாநாட்டு மக்கள் இதனால் மேலும் சிரமப்பட உள்ளனர். விமானச்சேவை மூலம் யாழிற்கு 300 பேர் வரையே தினமும் பயணிக்க முடியும்.

இதே வேளை கடல் புலிகளின் 3 படகுகளை தாம் தாக்கியதாக கடல் படையினர் அறிவித்துள்ளனர். முதலில் பாரிய சுடுகலன்கள் பூட்டிய 3 தாக்குதல் படகு எனவும் பின்னர் ஆயுதங்கள ஏற்றிச்சென்ற படகுகள் அழிக்கப்படடன என முன்னுக்குப்பின் முரணாக செய்தி வெளியிட்டுள்ளனர்.

thanks:pathivu

No comments: