Monday, 21 April 2008

இராணுவ கோப்ரலின் உடலை அடக்கம் செய்வது கூட ஒரு யுத்தம் -ajeevan.ch

தம்புல்லயில் உள்ள கிருலஸ்ஸ என்பது வறுமைக் கோட்டில் உள்ள ஒரு கிராமம். மணலாறு போர் முனையில் இறந்த கோப்ரல் எம்.பீ.திஸாநாயக்கவின்(24) உடலத்தை கொண்ட சவப்பெட்டியை வீட்டுக்குள் வைப்பதற்கு சிறிதாக இருந்த அவரது வீட்டுக் கதவின் ஒரு பகுதியை அகற்ற வேண்டி வந்தது.

அடுத்து உடலத்தை இராணுவ மரியாதையோடு அடக்கம் செய்யும் இடத்துக்கு கொண்டு செல்வதற்கு அப் பகுதியில் ஒரு பாதை இல்லை. எனவே கிருலஸ்ஸ கிராமத்தின் ஆற்றைக் தண்ணீரில் நனையாமல் கடப்பது இராணுவத்தினருக்கு அடுத்த பிரச்சனை.

கிராமத்து இளைஞர்கள் மணல் மூடைகளை போட்டு ஆற்றை கடக்க இராணுவத்தினருக்கு உதவியதோடு சவப்பெட்டியைக் கூட கிராமத்து இளைஞர்களே ஆற்றை கடந்து கொண்டு சென்றனர்.

அதன் பின்னரே இராணுவ மரியாதை செய்வதற்கு இராணுவம் உடலத்தை சுமந்தது.

நாட்டில் தீர்க்க வேண்டிய பிரச்சனைகள் எத்தனையோ இருக்க யுத்தம் வார்த்தைகளின்றி சொல்லும் கதைகளில் இதுவும் ஒன்று?

No comments: