Tuesday, 22 April 2008

மோகன் வேலு கடத்தலுக்கு பிள்ளையான் குழுவே காரணம் - ஐ.தே.க.

கிழக்கு மாகாணசபைத் தேர்த்ல்களில் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவரது மருமகனான மோகன் வேலுவை தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பே கடத்தியுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சி குற்றஞ்சாட்டுகின்றது.

எனினும், இந்தக் குற்றச்சாட்டை முற்றாக நிராகரிக்கும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பு, இந்த கடத்தலை வன்னிப் புலிகளே மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கின்றன. கடந்த ஞாயிற்றுக் கிழமை மட்டக்களப்பு பாண்டிருப்பு பகுதியில் வைத்து திரு.வேலு கடத்தப்பட்டு நேற்று காலை விடுவிக்கப்பட்டுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இந்தக் கடத்தலை தாம் மேற்கொள்ளவில்லை தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பின் பேச்சாளர் அசாத் மௌலானா தெரிவித்துள்ளார்.

No comments: