Tuesday, 22 April 2008

ஐக்கிய மற்றும் பெடரல் முறைமை கலந்த யோசனைத் திட்டம்….

ஐக்கிய மற்றும் சமஸ்டி முறைமை என்பன கலந்து ஒரு புதிய அரசியல் சாசனமொன்றை அமைப்பதற்கான பரிந்துரைகள் குறித்து சர்வகட்சி பேரவை ஆலோசித்து வருவதாக பேரவையின் தலைவர் திஸ்ஸ விதாரண தெரிவித்துள்ளார்.

இந்த யோசனைத் வெகுவிரைவில் திட்டம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டார். பிரித்தானிய உள்ளிட்ட பல நாடுகளுக்கு விஜயம் மேற்கொண்டு குறித்த நாடுகளில் நிலவும் ஆட்சி முறைமைபற்றி ஆய்வு செயயப்பட்டுள்ளது. இந்த நிலையில் நாட்டின் பிரதான கட்சிகளான ஐக்கிய தேசியக் கட்சிக்கும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும் இடையிலான இணக்கப்பாடு தீர்வுத் திட்டங்களின் போது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

No comments: