மக்கள் விடுதலை முன்னணிக்கு எதிரான சதித்திட்டத்தின் பிரதான சூத்திரதாரி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவே என ஜே.வி.பி.யின் தலைவர் சோமவன்ச அமரசிங்க தெரிவித்துள்ளார்.
நேற்றயை தினம் ரி.என்.எல் தொலைக்காட்சி சேவையுடனான செவ்வியின் போதே ஜே.வி.பி.யின் தலைவர் இந்தக் கருத்தைத் தெரிவித்துள்ளார்.சில தினங்களுக்கு முன்னர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு ஜே.வி.பி. பிளவைத் தடுக்க இரகசிய நடவடிக்கைகளை முன்னெடுப்பதாக தம்மிடம் தெரிவித்ததாகவும்ää இந்த யோசனையை தாம் நிராகரித்ததாகவும் சோமவன்ச அமரசிங்க குறிப்பிட்டுள்ளார்.
கடந்த காலங்களில் ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆகிய காட்சிகளிலும் இவ்வாறான இரகசிய நடவடிக்கைகளின் மூலம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ பிளவை ஏற்படுத்தியுள்ளார் என அவர் தெரிவித்துள்ளார்.
இந்த அரசாங்கம் ஜே.வி.பி.யிலிருந்து விலகிச் செயற்படும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவினரின் பாதுகாப்பை வழங்கிää ஜே.வி.பி.க்கு எதிராக ஊடகங்களின் மூலம் பிரசாரம் செய்து வருவதாக ஜே.வி.பி.யின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்தார்.
ஜே.வி.பி.யில் இடம்பெற்ற சூழ்ச்சியின் பிரதான சூத்திரதாரி இந்த அரசாங்கமே என அவர் மேலும் குறிப்பிட்டார்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிற்கு மேலதிகமாக அவரது சகோதரர்களான பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஸää ஜனாதிபதியின் சிரேஸ்ட ஆலோசகர் பெசில் ராஜபக்ஸ மற்றும் அமைச்சர் டலஸ் அலப்பெரும ஆகியோர் ஜே.வி.பி. க்கு எதிராக விமல்வீரவன்ச ஊடாக பிரதான சதித்திட்டம் தீட்டியதாக அவர் தெரிவித்தார்.

No comments:
Post a Comment