புதுடில்லி : இந்தியாவில் இரு சக்கர வாகன உற்பத்தியில் முதல் இடத்தில் இருக்கும் ஹீரோ ஹோண்டா நிறுவனம், அதன் இரு சக்கர வாகனங்களுக்கான விலையை ரூ.500 முதல் ரூ.1000 வரை உயர்த்தி இருக்கிறது. உற்பத்தி செலவு அதிகரித்துள்ளதால் இந்த விலை உயர்வு கட்டாயமாகிறது என்று அந்த நிறுவனம் தெரிவித்திருக்கிறது. கடந்த வாரம்தான் அந்த நிறுவனம், சில மாடல்களுக்கு விலையை ரூ.500 முதல் ரூ.1000 வரை விலை உயர்த்தியிருந்தது. இப்போது மீண்டும் சில மாடல்களுக்கு விலை உயர்த்தப்படுகிறது. உற்பத்தி பொருட்களின் விலை உயர்வை நாங்கள் முடிந்தவரை பொறுத்துக்கொண்டோம். இப்போது அது முடியாமல் போகவே அதை வாடிக்கையாளர்களுக்கு தள்ளிவிடுகிறோம் என்று ஹீரோ ஹோண்டாவின் மேலாண்மை இயக்குனர் பவன் முஞ்சால் தெரிவித்தார். ஹீரோ ஹோண்டாவின் ஸ்பிளண்டர் பிளஸ், பேஷ்ஷன் பிளஸ், சி.பி.இசட்., மற்றும் ஹங்க் போன்ற மாடல்களுக்கு விலை உயர்வு இருக்கும் என்று தெரிகிறது.
Monday, 21 April 2008
ஹீரோ ஹோண்டாவின் விலை உயர்கிறது
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment