Saturday, 12 April 2008

பீ.ஏப்.ஏ கால்பந்தாட்ட விருது ரொனொல்டோவிற்கு?

மான்செஸ்டர் யுனைடட் கால்பந்தாட்ட கழகத்தின் முன்னணி வீரரான கிறிஸ்டியானோ ரொனொல்டோ இவ்வருடம் பீ.எவ்.ஏ. கால்பந்தாட்ட விருதுக்கான பெயர்ப்பட்டியலில் முன்னணி வகிப்பதாக பீ.பீ.சீ. செய்தி வெளியிட்டுள்ளது. தொழில்சார் கால்பந்தாட்ட வீரர்களின் கூட்டமைப்பு (பீ.எவ்.ஏ.) யினால் வருடாந்தம் சிறந்த கால்பந்தாட்ட வீரர் ஒருவர் தெரிவு செய்யப்பட்டு கௌரவிக்கப்படுவார். இம்முறை மான்செஸ்டர் யுனைடட் கழகத்திற்காக சிறப்பாக ஆடிவரும் ரொனொல்டோ இதுவரையில் 37 கோல்களை போட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments: