Friday, 11 April 2008

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் ஆயுததாரிகளின் தாக்குதலில் காயம் -வவுனியா பூவரசங்குளத்தில் சம்பவம்

வவுனியா, பூவரசங்குளம் பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்துபேர் இனந்தெரியாத ஆயுததாரிகளால் தாக்கப்பட்டு படுகாயமடைந்துள்ளனர். கூரிய ஆயுதங்களினால் தாக்கப்பட்டுள்ள இவர்கள் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இடைப்பட்ட காலப்பகுதியிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. குலசேகரம் தேவராசா, தேவராசா லலிதா தேவி, தேவராசா கிருஷ்ணராஜ், தேவராசா ஷர்மிளா, மற்றும் தேவராசா தர்மினி ஆகியோரே தாக்குதலில் காயமடைந்துவர்களாவர். கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டு வந்த கொள்ளையர்களே இவர்களை கூரிய ஆயுதங்களால் தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வீட்டிலிருந்தவர்களை தாக்கிய கொள்ளையர்கள் பெருமளவு நகைகளை கொள்ளையிட்டுச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இச்சம்பவம் குறித்து வவுனியா பொலிஸார் விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.

No comments: