உயிர் அச்சுறுத்தல் நிலவுவது தொடர்பான பாராளுமன்ற உறுப்பினர்களின் முறைப்பாடுகளுக்கு மனித உரிமைகள் அமைச்சர் பதில் அளிக்க உள்ளார். இலங்கையின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இருக்கும் உயிர் அச்சுறுத்தல் மற்றும் மனித உரிமை மீறல் தொடர்பாக சில பாராளுமன்ற உறுப்பினர்கள் சர்வதேச பாராளுமன்ற பேரவையில் முறைப்பாடு செய்துள்ளனர். இம்முறை நடைபெறவுள்ள சர்வதேச பாராளுமன்ற பேரவைக் கூட்டத்தொடரின் போது இந்த முறைப்பாடுகளுக்கு மனித உரிமைகள் அமைச்சர் மஹிந்த சமரசிங்க பதிலளிக்க உள்ளதாக கூறப்பட்டுள்ளது. சர்வதேச பாராளுமன்ற் பேரவையின் 118 கூட்டத்தொடர் தென் ஆபிரிக்காவின் கேப் டவுனில் இன்றைய தினம் ஆரம்பாகவுள்ளது. உயிர் அச்சுறுத்தல் உள்ள பாராளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பாக இலங்கை அரசாங்கம் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் குறித்து இங்கு விளக்கமளிக்கப்படவுள்ளதாக அமைச்சர் மஹிந்த சமரசிங்க கொழும்பில் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.
இதனால், குறித்த பாராளுமன்ற உறுப்பினர்களுக்காக திறக்கப்பட்டுள்ள அனைத்து கோவைகளையும் மூடிவிடுமாறு அமைச்சர் சர்வதேச பாராளுமன்ற பேரவையிடம் கோரியுள்ளார். இந்தக் கூட்டத்தொடரின் போது இலங்கையில் மனித உரிமை விவகாரங்கள் தொடர்பாக தெளிவுபடுத்த உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
Friday, 11 April 2008
சர்வதேச பாராளுமன்ற பேரவையில் இலங்கை விளக்கம் அளிக்க உள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment