அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோ புள்ளே படுகொலை செய்யபட மாட்டார் என, தமிழீழ விடுதலைப் புலிகள் உறுதிமொழி வழங்கியிருந்தாக சிங்கப்பூர் வர்த்தகர் ஒருவர் தகவல் வெளியிட்டுள்ளார், என திவியன சிங்கள நாழிதல் செய்தி வெளியிட்டுள்ளது. இரண்டு மாதங்களுக்கு முன்னர் இலங்கை சென்றிருந்த குறித்த வர்த்தகர், அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோ புள்ளேயிடம் இந்த உறுதிமொழியை வழங்கியதாகத் அந்த செய்தியில் குறிப்படப்பட்டுள்ளது. இந்த உறுதிமொழி தொடர்பாக அரசாங்கத்தின் பிரதான இரண்டு அமைச்சர்களுக்கு தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளன. இதற்கு முன்னர் சிங்கப்பூரிலிருந்து சென்ற, சார்ள்ஸ் ஞானகோன் என்பவரால் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் லக்ஸ்மன் கதிர்காமரை விடுதலைப் புலிகள் கொலை செய்ய மாட்டார்கள் என உறுதிமொழி அளிக்கப்பட்டிருந்ததாகவும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Friday, 11 April 2008
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment