பெங்களுரு : இன்போசிஸ் டெக்னாலஜிஸ் நிறுவனம், இந்த நிதி ஆண்டில் ( 2008 - 09 ) அதன் ஊழியர்கள் எண்ணிக்கையை ஒரு லட்சமாக உயர்த்துகிறது. இதற்காக இந்த வருடத்தில் அவர்கள் 20 ஆயிரத்தில் இருந்து 25 ஆயிரம் பேர் வரை வேலைக்கு எடுக்கிறார்கள். இப்போது அவர்களிடம் 91,187 பேர் வேலை செய்வதாக அதன் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். நாங்கள் ஏற்கனவே இந்த வருடத்தில் இதுவரை 18,000 பேரை கேம்பஸ் மூலம் வேலைக்கு தேர்ந்தெடுத்து வைத்திருக்கிறோம். அதில் 80 சதவீதத்தினர் ( 14,400 ) வேலையில் சேர்ந்து விடுவர் என்று எண்ணுகிறோம் என்று இன்போசிஸ் நிறுவனத்தின் மனித வள மேம்பாட்டுத்துறை தலைவர் மோகன்தாஸ் பை தெரிவித்தார். இந்தியா மட்டுமில்லாமல் அமெரிக்கா, ஐரோப்பா, ஆஸ்திரேலியா, சீனா மற்றும் மெக்ஸிகோவில் அலுவலகம் வைத்திருக்கும் இன்போசிஸ் நிறுவனத்தினர், அங்குள்ள அலுவலகங்களுக்கு தேவையான ஊழியர்களை அந்தந்த நாட்டிலேயே பெரும்பாலும் எடுத்துக்கொள்கிறார்கள். வெளிநாடுகளில் இருக்கும் எங்கள் அலுவலகங்களிலும் இந்த வருடத்தில் ஊழியர்கள் எண்ணிக்கை அதிகரிக்கப்படுகிறது. கடந்த நிதி ஆண்டில் 12 - 15 சதவீதமாக இருந்த சம்பள உயர்வு, இந்த வருடத்தில் 11 - 13 சதவீதமாக இந்தியர்களுக்கும், 4 - 5 சதவீதமாக வெளிநாட்டவர்களுக்கும் இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார். கடந்த நிதி ஆண்டில் எங்களிடம் இருந்து 14,231 ஊழியர்கள் வெளியே சென்றிருக்கிறார்கள். 18,946 பேர் புதிதாக வேலைக்கு வந்திருக்கிறார்கள் என்றார் அவர்.
Wednesday, 16 April 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment