கிழக்கு மாகாணம் பூரணமாக புலிகளிடமிருந்து விடுவிக்கப்பட்டதாக தம்பட்டம் அடிக்கும் அரசாங்கம் எதற்காக தேர்தல் பிரசாரங்களுக்கு மாலை 6 மணியுடன் தடைவிதித்துள்ளது என்று முஸ்லிம் காங்கிரஸ் கேள்வியெழுப்பியுள்ளது. கிழக்கு விடுவிக்கப்பட்ட பின்னரும் தமக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதாக ஜனநாயக வழிக்கு திரும்பியோரென கூறுவோர் எவ்விதம் கூற முடியுமெனவும் முஸ்லிம் காங்கிரஸ் வினாவெழுப்பியுள்ளது. இதுபற்றி முஸ்லிம் காங்கிரஸ் செயலாளர் ஹஸன் அலி கூறுகையில், ஐ.தே.க.- முஸ்லிம் காங்கிரஸின் கூட்டு அரசாங்கத் தரப்புக்கும் அதன் சகபாடிகளுக்கும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதையடுத்து எமது பிரசார நடவடிக்கைகளை அரசு முடக்க ஆரம்பித்துள்ளது. இதனொரு அங்கமே சகல தேர்தல் பிரசாரங்களும் மாலை 6 மணியுடன் இடைநிறுத்தப்பட வேண்டுமென்ற கட்டளையாகும். இக்கட்டளை முஸ்லிம் காங்கிரஸினை இலக்குவைத்து உயர்மட்டத்தினரால் மேற்கொள்ளப்பட்டதாகும். முஸ்லிம் பிரதேசங்களில் மாலை 6 மணிக்குப் பின்னர்தான் தேர்தல் பிரசாரங்கள் சூடுபிடிக்கும். எமது கூட்டங்களுக்கு மக்கள் வருவதை தடைசெய்யவே இக்கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளமை தெளிவாகிறது. கிழக்கு விடுவிக்கப்பட்டதாக கூறும் அரசாங்கம் எவ்வாறு பாதுகாப்புக் காரணங்களுக்காக மாலை 6 மணியுடன் தேர்தல் பிரசாரத்தை இடைநிறுத்த முடியும்? அரசாங்கம் எதற்காக தம்பட்டம் அடிக்க வேண்டும். கிழக்கு விடுவிக்கப்பட்டுள்ளது என்றால் அங்கு பாதுகாப்பு சீராக்கப்பட்டுள்ளது என்றுதான் அர்த்தம். ஆனால், இதற்கு முரணாக தேர்தலில் குதித்துள்ள ஒரு தரப்புக்கு மாத்திரம் பாதுகாப்பு அச்சுறுத்தல் உள்ளதெனக் கூறி எவ்வாறு அவர்கள் ஆயுதங்களை வைத்திருக்க அனுமதிக்க முடியும்? அரசாங்கம் ஜனநாயக வழிக்கு திரும்பியதாக கூறும் ஒரு குழுவுக்கு மாத்திரம் ஆயுதங்களை வைத்திருக்க அனுமதிப்பது ஏனைய அரசியல் சக்திகளுக்கு மிகப்பெரும் அச்சுறுத்தல். இவ்வச்சுறுத்தல் நியாயமான தேர்தலுக்கு உதவப்போவதில்லை. இதுபற்றி சர்வதேச சமூகம் உடன் கவனம் செலுத்துவது அவசியமாகுமென்றார்.
Wednesday, 16 April 2008
கிழக்கை முழுமையாக விடுவித்ததாக தம்பட்டமடிக்கும் அரசு பிரசாரத்தை மாலை 6 மணியுடன் நிறுத்துவது ஏன்?
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment