குவைத்: குவைத் நகரில் திடீர் என கடும் சூறைக்காற்றுடன் கூடிய இடி மின்னலுடன் பலத்த மழை பெய்ததால் அங்கு இயல்பு வாழ்க்கை அடியோடு பாதிக்கப்பட்டது.
கடந்த 12ம் தேதி மாலையில் வெயில் அளவு 33 டிகிரியாக இருந்த நிலையில் வானத்தில் திடீரென மழை மேகம் சூழ்ந்தது. கடும் சூறைக் காற்றும் வீசியதால் புழுதிக் காற்றி பல மீட்டர் தூரத்துக்கு எழுந்தது.
இதைத் தொடர்ந்து பலத்த இடி, மின்னலுடன் சுமார் அரை மணி நேரம் விடாமல் மழை பெய்தது.
மழையினாலும், காற்றினாலும் சாலை தெரியாமல் வாகனங்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. சூறைக் காற்றினால் மின் கம்பங்கள் பெயர்ந்து விழுந்தன. இதனால் மின்தடையும் ஏற்பட்டது.
மழைநீர் வடிகால்கள் அடைத்துக் கொண்டதால் கழிவுநீர்க் குழாய்கள் உடைப்பெடுத்து குடியிருப்புகளுக்குள் நீர் புகுந்தது.
கடந்த 4 ஆண்டுகளுக்குப் பிறகு குவைத்தில் இப்படியொரு பேய் மழை பெய்துள்ளது.
Wednesday, 16 April 2008
குவைத்தில் திடீரென பயங்கர மழை!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment