வேலூர் சிறையில் நளினியை சந்தித்த பிரியங்காவிடம் தமிழக அரசு விசாரணை நடத்த வேண்டும் என ஜனதா கட்சி தலைவர் சுப்ரமணியன் சுவாமி கோரிக்கை விடுத்துள்ளார்.
தமிழக அரசு இதற்கான நடவடிக்கையை மே 21-க்குள் எடுக்கவில்லை எனில், பிரியங்காவிடம் போலீஸôர் விசாரணை நடத்த வேண்டும் என நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்வேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, அவர் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை:
நளினியுடன் நடத்திய சந்திப்புக்கான காரணத்தை பிரியங்கா வெளியிடவில்லை. இந்நிலையில், பத்திரிகைகளில் வெளியான செய்திகள் அனைத்தும், இரண்டாம் நபர் அல்லது மூன்றாம் நபர்கள் கூறியதாகத் தான் உள்ளன.
இதற்கிடையே, வேலூர் சிறைக்குள் செல்ல பிரியங்கா உரிய அனுமதியைப் பெறவில்லை. இதை, சிறை அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர். எனவே, பிரியங்காவிடம் தமிழக போலீஸôர் விசாரணை நடத்த வேண்டும்.
என்.டி.ஏ. அரசு நளினியின் மரண தண்டனையை, ஆயுள் தண்டனையாகக் குறைத்தது சட்டப்புறம்பானது. அரசியல் அமைப்புச் சட்டப்படி இதுபோன்ற தண்டனைக் குறைப்பை குடியரசுத் தலைவர் தான் அளிக்க முடியும். ஆனால், திமுக அரசு தமிழக ஆளுநர் மூலம் இதைச் செய்தது.
இந்நிலையில், நளினியை விடுதலை செய்ய பிரியங்கா முயற்சித்தால், இதை எதிர்த்து பொதுநல வழக்குத் தொடருவதுடன், அவருக்கு அளிக்கப்பட்ட தண்டனைக் குறைப்பை ரத்து செய்யவும் கோருவேன் என்றார்
Wednesday, 16 April 2008
பிரியங்காவை விசாரிக்க வேண்டும்: சுப்ரமணியன் சுவாமி கோரிக்கை
Subscribe to:
Post Comments (Atom)
3 comments:
Why he is angry on this subject,i hope he is afraid that his name will come out as main brain for the Rajiv's assaissination
Forgiveness is a great act. Oppose that is an animal act. Swamy behave likes Srilankan Army. Shame.
Prior to that,Swamy(what a shame to have a name)s(w)amy should be interrogated(just to get the truth) by a local police team?
It is high time, samy should come forward to confess all by himself,who r persons behind this?
will he?
Any one,who want to meet a person in the prison can be done-as per IPC(indian penal code) Samy is also a (criminal) lawer;is he not aware of it?
Post a Comment