கலகம் பிறந்தால் வழி பிறக்கும் என்ற பழமொழி யாருக்கு பொருந்துகிறதோ இல்லையோ, நடிகர் ரஜினிக்கு கனக்கச்சிதமாக பொருந்தும். ஒகேனக்கல் கலகம் உருவாகியதால், ரஜினி அரசியலுக்கு வருகிறார்; காலத்தின் கட்டாயத்தினால் புதுக் கட்சியையும் விரைவில் துவக்குகிறார் என்று அவரது ரசிகர் மன்றங்களின் வட்டாரங்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றன.
தமிழக அரசியல் உலகில், ரஜினி எப்போது கட்சி ஆரம்பிப்பார் என்று அவருடைய லட்சக்கணக்கான ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர். ஆனால், அரசியலை விட ஆன்மிகத்தில் ரஜினியின் ஈடுபாடு அதிகமாக உள்ளது. சில தேர்தல்களில் அவர் வாய்ஸ் கொடுப்பதும் உண்டு. கடந்த 1996ம் ஆண்டு சட்டசபை, பார்லிமென்ட் தேர்தல், 98ம் ஆண்டு பார்லிமென்ட் தேர்தல், 2004ம் ஆண்டு பார்லிமென்ட் தேர்தலில் ரஜினி வெளிப்படையாக சில கட்சிகளை எதிர்த்தார்; சில கட்சிகளை ஆதரித்தார். ஆனால், அவர் முழுநேர அரசியலுக்கு வரவில்லை. அவரது தன்னம்பிக்கையில் தயக்கமும் ஒரு காரணமாக இருந்தது. திரையுலகில் தனக்கு பிறகு வந்த நட்சத்திரங்கள் விஜயகாந்த், சரத்குமார் போன்றவர்கள் புதிய கட்சிகளை துவங்கி லட்சக்கணக்கான தொண்டர்களை கொண்ட கட்சிகளை வழி நடத்தி செல்கின்றனர். ஆனால், திரையுலகின் உச்சத்திலிருக்கும் நாம் ஏன் கட்சியை ஆரம்பிக்கக் கூடாது என்று தனக்கு நெருக்கமான நண்பர்களிடம் ரஜினி அடிக்கடி ஆலோசிப்பதும் உண்டு. தன்னை வாழ வைத்த தமிழக மக்களுக்கு, தன்னால் முடிந்த நல்ல காரியங்கள் செய்ய வேண்டும் என்பது ரஜினியின் லட்சியம். நல்ல நேரம், நல்ல காலம் ஒத்துழைத்து வரும் போது அரசியலில் நுழையலாம் என்று கணக்கு போட்டிருந்த ரஜினிக்கு, தற்போது அரசியலில் நுழைவதற்கு அவரது உணர்ச்சிவசப்பட்ட பேச்சு பின்னணியில் இருக்கிறது.
Saturday, 12 April 2008
கன்னடர்களின் கலகம்: ரஜினி புதிய கட்சி?
Subscribe to:
Post Comments (Atom)

4 comments:
இது எங்கு பிரசுரிக்கப்பட்டது அதாவது இதன் மூலம்
அல்லது இது உங்களின் ஆசையா ?
கனவா?
http://thurogangal.blogspot.com/
opinion poll showed only 14% would like to see him as CM/TN.So he can join VAIKO as he has lot of good qualities than all others!
தமிழக மக்களிற்கு சேவையாற்ற வாறாரோ? சினிமா மூலம் தமிழ் மக்களிடமிருந்து கறந்தது போதாதென்று அரசியல் மூலமும் தமிழனைச் சுறண்ட வருகிறார். வரவேருங்கள் தமிழர்களே! ஏனென்றால் வந்தவரை வாழ வைப்பவர் நீங்களல்லவா!
Post a Comment