இலங்கைக்கான பிரித்தானிய தூதுவர் பீற்றர் ஹெய்ஸ் இன்று ஜே.வி.பி. யின் தலைவர் சோமவன்ச அமரசிங்கவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இன்று காலை பெலவத்தையிலுள்ள ஜே.வி.பி. தலைமையகத்தில் நடைபெற்ற இச் சந்திப்பில் ஜே.வி.பி. யின் சார்பில் எம்.பி. க்களான விஜித்த ஹேரத், இராமலிங்கம் சந்திரசேகரன், பிமல் ரத்னாயக்க ஆகியோர் கலந்து கொண்டனர்.
காலை 9.30 மணி முதல் 11.30 மணிவரை இரு மணி நேரம் இடம்பெற்ற இச்சந்திப்பின் போது இலங்கையின் இனப்பிரச்சினைக்கான விடயத்தில் ஜே.வி.பி.யின் நிலைப்பாடு குறித்து சோமவன்ச அமரசிங்க விளக்கிக் கூறியுள்ளார். கிழக்கு மாகாணத்தில் பாதிக்கப்பட்ட மக்களின் குறைபாடுகளை முன்வைத்து அவற்றிற்கு பரிகாரங்களை பெற்றுக் கொடுக்கவும் நஷ்டஈடு வழங்குவதையும் நோக்கமாகக் கொண்டு விசேட ஆணைக்குழு அமைக்கப்பட வேண்டும் என்று சோமவன்ச அமரசிங்க பேச்சுவார்த்தையின்போது தெரிவித்துள்ளார்.
எப்படியெனினும் இலங்கையின் உள்நாட்டுப் பிரச்சினையில் வெளிநாட்டுத் தலையீடுகளை எதிர்க்கின்றோம். அதேநேரம் விடுதலைப் புலிகளை பலவீனமடையச் செய்வதற்கு பிரிட்டனும் ஐரோப்பிய ஒன்றியமும் ஆதரவு வழங்கினால் ஆதரிப்போமென்றும் தெரிவித்துள்ளார்.
ஊடகங்கள் மூலமான செய்திகளூடாகவே ஜே.வி.பி. தொடர்பாக இதுவரை காலம் அறிந்து வைத்திருந்ததாகவும் இன்று நேரில் பேச்சு நடத்த சந்தர்ப்பம் கிடைத்தமை மகிழ்ச்சிக்குரியதாகுமென்றும் பிரிட்டன் உயர்ஸ்தானிகர் தெரிவித்துள்ளார்.
Monday, 21 April 2008
பிரித்தானிய தூதுவர் ஜே.வி.பி. தலைவர் சோமவன்சவுடன் சந்திப்பு
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment