பிரபாகரன் திரைப்படத்தை மீட்க ஜனாதிபதி தலையிட வேண்டும் என கோரும் மகஜர் ஒன்றில் ஒரு லட்சம் கையெழுத்துக்கள் பெறப்பட்டுள்ளன. படத் தயாரிப்பு குழுவினர் கொழும்பு கோட்டை தொடரூந்து நிலையத்திற்கு முன்னால் பொது மக்களிடம் கடந்த 11ஆம், 12ஆம் திகதிகளில் இந்த கையெழுத்துக்களை பெற்றுள்ளனர். விடுதலைப்புலிகளுக்கு எதிரான கருத்துக்களை கொண்ட பிரபாகரன் திரைப்படத்தின் தமிழ் பதிப்பின் இறுதி கட்ட தயாரிப்பு பணிகள் சென்னையில் உள்ள ஜெமினி கலையகத்தில் நடைபெற்ற வேளை, தமிழ் நாட்டை சேர்ந்தவர்களால், படச்சுருள் கைப்பற்றப்பட்டது. அதன் போது பிரபாகரன் படத்தின் இயக்குனர் துஸார பீரிஸ் தாக்குதலுக்கு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதேவேனை பிரபாகரன் படத்திற்கு தடைவிதிக்க கோரி விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பின் தலைவர் தொல் திருமாவளவன் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுமீதான விசாரணையை அடுத்து ஜெமினி கலையத்தில் இருந்து படச்;சுருளை வெளியேற்ற கூடாது என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில் குறித்த மனுமீதான விசாரணைகள் எதிர்வரும் 17ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு வருகிறது. பிரபாகரன் திரைப்படம் தமிழர்களை மலிப்படுத்தியுள்ளதாகவும் இந்த திரைப்படத்தை திரையிட்டால் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படும் எனவும் திருமாவளவன் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
Tuesday, 15 April 2008
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
we are signing more than 1,00,000,urging ruling Delhi congress govt.not to hand over the print....
Post a Comment