அம்பாறை மஹஓய ரதுபஸ்உயன பிரதேசத்தில் சிவில் பாதுகாப்பு படையை சேர்ந்த ஒருவர், பெண் ஒருவர் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளார். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேரை சிவில் பாதுகாப்பு படையினர் தனது உத்தியோகபூர்வ துப்பாக்கியினால் கொலை செய்து 9 நாட்களுக்கு பின் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதென்பது குறிப்பிடத்தக்கது. இந்தத் தாக்குதலை மேற்கொண்ட சிவில் பாதுகாப்பு படை உறுப்பினரும்; தற்கொலை செய்துகொண்டுள்ளார். தனிப்பட்ட தகராறின் காரணமாக இந்த துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அம்பாறை பிரதேசத்திற்குப் பொறுப்பான சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஆனந்த விஜேசூரிய தெரிவித்தார். சம்பவத்தில் காயமடைந்த பெண் அம்பாறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கு முன்னர் சாலிய வௌ பிரதேசத்தில் சிவில் படைவீரர் ஒருவர் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேரை கொலை செய்ததுடன், பெண் ஒருவரை பாலியல் வல்லுறவுக்கும் உட்படுத்தியிருந்தார். உரிய கல்வித் தகமையோ அல்லது பயிற்சியோ இல்லாத சிவில் பாதுகாப்பு படையினருக்கு ஆயுதங்கள் வழங்கப்பட்டதன் மூலம் சிறிய குடும்பத் தகராறு அல்லது தனிப்பட்ட பிரச்சினைகளின் போது ஆயுதங்களை பயன்படுத்தக் கூடிய நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலைமை மிக மோசமான பின் விளைவுகளை ஏற்படுத்தக் கூடும் என சமூகவியலாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
Tuesday, 15 April 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment