Wednesday, 16 April 2008

விமல் - அமைச்சுப் பதவியொன்றை பெற்றுக்கொள்வார் –லால்காந்த.

ஜே.வீ.பீ பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச ஜனாதிபதியுடன் இணைந்து அமைச்சுப் பொறுப்பொன்றை ஏற்றுக்கொள்வார் என லால்காந்த தெரிவித்துள்ளார். விமல் வீரவன்சவுடன் சென்ற ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்கள் நிர்க்கதியான நிலைக்கு தள்ளப்படுவர் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்த நிலையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் வாலைப்பிடித்துக் கொண்டு விமல் அமைச்சுப் பொறுப்பை ஏற்றுக்கொண்டால், ஏனைய விமல் தரப்பு பாராளுமன்ற உறுப்பினர்களை கட்சி மீண்டும் ஏற்றுக்கொள்ளும் எனவும் அவர் குறிப்பிட்டார். காவற்துறையினரின் விளக்க மறியலில் தற்போது உள்ள ஜே.வி.பி. பாராளுமன்ற உறுப்பினர் ஜயந்த விஜேசேகரவை காப்பாற்ற விமலின் உதவி தேவையில்லை தெரிவித்துள்ள கே.டி. லால்காந்த எதிர்வரும் 17ம் திகதி அவரை விடுதலை செய்வதற்கான சகல ஏற்பாடுகளையும் கட்சி மேற்கொண்டுள்ளதாக கூறினார். கிழக்குத் தேர்தல்கள் நடைபெறவுள்ள வேளையில் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஜயந்தவை விளக்க மறியலில் வைத்ததன் மூலம் விமல் தரப்பு அரசாங்கத்திற்கு உதவி செய்துள்ளதாகவும் லால்காந்த குற்றம்சாடடியுள்ளார்.

No comments: