பாண் வெட்டும் கத்தியினால் தனது அண்ணனின் குரல்வளையை வெட்டிக் கொலை செய்தமை தொடர்பாக உயர்தர வகுப்பு மாணவி ஒருவரை கல்கிரியாகம பொலிஸார் கைது செய்துள்ளனர். மேற்படி கொலைச் சம்பவம் கடந்த 10 ஆம் திகதி காலை 10 மணியளவில், கல்கிரியாகம பொலிஸ் பிரிவிலுள்ள உதுறுவேர் என்னும் கிராமத்திலுள்ள வீடொன்றில் நிகழ்ந்துள்ளது. கொலை தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள உயர் வகுப்பு மாணவியான 18 வயது யுவதிக்கும் இளைஞரொருவருக்கும் இடையே இருந்து வந்த காதல் தொடர்பை கைவிடுமாறு சம்பவ தினம் காலை காலஞ்சென்றவர் தனது ஒரே தங்கையிடம் கூறியதாகவும் தொடர்ந்து வாய்த்தர்க்கம் ஏற்பட்டு பின்னர் தகராறு தீர்த்து வைக்கப்பட்டதாகவும் பொலிஸ் விசாரணையின் போது தெரிவிக்கப்பட்டது. சற்று நேரத்தின் பின்னர் காலஞ்சென்றவர் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்த்துக் கொண்டிருந்ததாகவும் பின்புறமாகப் பாண் வெட்டும் கத்தியுடன் சென்ற அவரது தங்கை, அண்ணனின் கழுத்துக் குரல்வளைப் பகுதியில் குத்தி இழுத்துவிட்டதாகவும் குரல்வளைப் பகுதியில் ஏற்பட்ட இரத்தப் பெருக்கினால் அண்ணன் உயிரிழந்ததாகவும் ஆரம்பக்கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது. தங்கையின் கத்தி வெட்டுக்கு இலக்காகி உயிரிழந்தவர் சுரங்கா ஏக்கநாயக்க (வயது - 24) என்ற டிப்ளோமா பட்டதாரியாவார். ஆறு சகோதரர்களைக் கொண்ட குடும்பத்தில் சந்தேக நபரான யுவதி மாத்திரமே பெண் என்பது குறிப்பிடத்தக்கது. சந்தேக நபர் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருப்பதுடன், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கல்கிரியாகம பொலிஸார் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.
Wednesday, 16 April 2008
.காதலுக்கு எதிர்ப்புத் தெரிவித்த அண்ணனின் குரல்வளையை அறுத்துக் கொன்ற தங்கை--கல்கிரியாகம
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment