Wednesday 16 April 2008

மன்னாருக்குள் வெளியார் அனுமதிக்கப்படுவதில்லை.

மன்னாரை நிரந்தர முகவரியாகக் கொண்டவர்களைத் தவிர வேறு எவரும் மன்னாருக்குள் உட்பிரவேசிப்பது தடை செய்யப்பட்டிருப்பதாக தெரியவருகிறது. பாதுகாப்பு காரணங்களின் நிமித்தம் மதவாச்சி ஊடான தென்பகுதிக்கான போக்குவரத்து மதவாச்சி வரை மட்டுப்படுத்தப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கின்ற நிலையில் வெளி மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் மன்னாருக்குள் பிரவேசிப்பதனை படைத்தரப்பு தடை செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
மன்னார் மதவாச்சி பிரதான வீதியில் முருங்கன் காவற்துறைப் பிரிவிற்கு உட்பட்ட கட்டையடம்பன் பகுதியில் அமைந்துள்ள இராணுவ சோதனைச் சாவடியில் தேசிய அடையாள அட்டை பரிசீலிக்கப்பட்டு அதில் வெளி மாவட்டம் என அடையாளம் காணப்படும்போது அந்த சோதனைச்சாவடியைக் கடந்து மன்னாருக்கு செல்ல முடியாத நிலையில் பலர் திருப்பி அனுப்பப்பட்டு வருவதாக தெரியவருகின்றது. கடந்கால யுத்த அனர்த்தங்கள் காரணமாக நாட்டின் பல்வேறுபாகங்களிலும் இருந்து இடம் பெயர்ந்து மன்னார் மாவட்டத்தில் வசித்து வந்தவர்கள் தமது தேவைகளின் நிமித்தம் வெளி மாவட்டங்களுக்கு சென்று திரும்ப முடியாத நிலை ஏற்பட்டிருக்கின்றது. அவ்வாறு அனுப்பப்பட்டவர்களில் பெரும்பாலானோர் கிளிநொச்சி பகுதியில் இருந்து இடம் பெயர்ந்து மன்னாரில் சுமார் பத்துவருடங்களுக்கு மேலாக வசித்து வந்தவர்கள் எனவும் தெரியவருகின்றது.

No comments: