குஜராத் மாநிலம் வடோதரா அருகே நர்மதை ஆற்றில் பேருந்து கவிழ்ந்து 43 பள்ளி மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். உயிரிழப்பு மேலும் அதிகமாக இருக்கும் என அஞ்சப்படுகிறது.
குஜராத் மாநிலம் பாக்பூர் என்ற ஊரைச் சேர்ந்த தலித் மாணவர்கள் 60 பேர் அரசுப் பேருந்து மூலம், போடேலி என்ற இடத்திற்கு இன்று காலை பரீட்சை எழுதச் சென்று கொண்டிருந்தனர்.
அப்போது போடேலி அருகே நர்மதை ஆற்றுப் பாலத்தில் பேருந்து சென்றபோது திடீரென நிலை தடுமாறி ஆற்றில் கவிழ்ந்து விழுந்தது.
இதில் 43 பேர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். இறந்தனர். பேருந்தின் டிைரவரும் உயிரிழந்தார்.
இதுவரை 43 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. இருப்பினும் உயிரிழப்பு 50க்கும் மேல் இருக்கும் என்று அஞ்சப்படுகிறது.
மீட்புப் பணிகள் முழு அளவில் முடுக்கி விடப்பட்டுள்ளன.
for more video news:http://isooryavidz.blogspot.com/
Wednesday, 16 April 2008
குஜராத் ஆற்றில் பஸ் கவிழ்ந்து 43 மாணவர்கள் பலி-(வீடியோ இணைப்பு)
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment