“நடுத்தர வயதில் உடல் குண்டடித்து, பெரிய தொந்தியுடன் இருப்பவர்களுக்கு, வயதான பின்,மனநல பாதிப்பு ஏற்படும்’என, ஆய்வில் தெரியவந்துள்ளது. நொறுக்கு தீனிகளை கண்டபடி உள்ளே தள்ளி,குண்டடித்துப் போய் இருப்பவர்களுக்கு, பல்வேறு நோய்கள் ஏற்படும் என்பது, ஏற்கனவே தெரிந்தது தான். அதிகமான உடல் எடை உள்ளவர்களுக்கு, நீரிழிவு நோய், இதய நோய் ஏற்படும் என்பதும் தெரிந்தது தான். அமெரிக்காவில் சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில், “நடுத்தர வயதுடையவர்களுக்கு, தொந்தி பெரிதாக இருந்தால், 70 வயதை எட்டும்போது, அவர்களுக்கு “டிமென்ஷியா’என்ற மனநல பாதிப்பு ஏற்படும் வாய்ப்பு உள்ளது’என்பது தெரியவந்துள்ளது. ஆய்வு மேற்கொண்ட குழுவைச் சேர்ந்த ராக்கெல் ஒயிட்மெர் கூறியதாவது: நடுத்தர வயதினர், தங்கள் உடல் நலத்தில் கவனமாக இருக்க வேண்டும். குறிப்பாக,அடிவயிறு பெரிதாகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அப்படி ஏதவாது அறிகுறி தெரிந்தால், அதை குறைக்க, சிகிச்சைகள் எடுத்துக் கொள்வது நல்லது. இல்லையெனில், அடி வயிறு பெரிதான பிரச்னை, நீண்ட காலத்திற்கு பின், சம்பந்தப்பட்டவரின் மூளையில் கடும் பாதிப்பை ஏற்படுத்தும். இதனால், மனநல பாதிப்பு ஏற்படும். கலிபோர்னியா மாகாணத்தில் வசிக்கும், 4045 வயதிற்குட்பட்ட , 6,500 பேரிடம் இதுபற்றி, நீண்ட கால ஆய்வு நடத்தப்பட்டது. இவர்களின், அடி வயிறின் சுற்றளவு கணக்கிடப்பட்டு, கண்காணிக்கப்பட்டது. இவர்களில், சராசரியாக, அடிவயிறு பெரிதாக இருந்தவர்களுக்கு, குறிப்பிட்ட சில ஆண்டுகளுக்கு பின் மனநல பாதிப்பு ஏற்பட்டது தெரியவந்தது. அதிகமான உடல் எடையும் சேர்ந்தால், இந்த பாதிப்பு அதிகம் ஏற்படுவதற்கு வாய்ப்பு உள்ளது.இவ்வாறு ராக்கெல் கூறினார்.
“டிமென்சியா’ என்றால் என்ன? : “டிமென்சியா’ பற்றி மருத்துவ நிபுணர்கள் கூறுகையில்,”டிமென்சியா’ என்பது குறிப்பிட்ட வகை நோய் அல்ல. மனிதனின் மூளைளை பாதிக்க கூடிய அறிகுறிகளே இது. இந்த பாதிப்பு ஏற்பட்டால், மனிதனின் சிந்திக்கும் ஆற்றல், சிதைவுறும். டிமென்சியா பாதிப்பிற்கு ஆளாகும் நபர்கள்,தங்களது உணர்வுகளை கட்டுப்படுத்தும் திறன், பிரச்னைகளுக்கு தீர்வு காணும் ஆற்றல் ஆகியவற்றை இழக்கின்றனர்’என்றனர்.
No comments:
Post a Comment