Friday, 4 April 2008

பிள்ளையானை கிழக்கு மாகாண சபையின் முதலமைச்சர் என்பது வெறும் பகல் கனவு - கிஸ்புல்லா

கிழக்கு தேர்தலில் முஸ்லிம் ஒருவரை முதலமைச்சராக்க வேண்டுமென்பதில் ரவூப் ஹக்கீமை தவிர ஏனைய சகலரும் உறுதியாக உள்ளனர். ஆனால் முஸ்லிம் ஒருவர் கிழக்கின் முதலமைச்சரானால் தமது இருப்புக்கு ஆபத்து ஏற்படுமென அஞ்சியே முஸ்லிம் ஒருவர் முதலமைச்சராவதை ஹக்கீம் விரும்பவில்லை. இதன் மூலம் அஸ்ரப்பின் கனவை அவர் தகர்த்தெறிந்து விட்டார். முஸ்லிம் காங்கிரஸ் தற்போது ஐக்கிய தேசியக் கட்சியுடன் கூட்டுச் சேர்ந்ததன் மூலம் எதிர்வரும் தேர்தலில் அவர்களின் தோல்வி உறுதியாகியுள்ளது. 7 ஆசனங்களுக்கு மேல் அவர்களினால் கைப்பற்ற முடியாது. பிள்ளையானுக்கு முதலமைச்சர் பதவி வழங்கப்படுமென ஜனாதிபதி ஒரு போதுமே வாக்குறுதி வழங்கவில்லை. ஆளும் தரப்பில் கூடிய ஆசனங்களைப் பெறுபவர்களுக்கு முதலமைச்சர் பதவியை வழங்கலாமென்பதே ஜனாதிபதியின் விருப்பமாகும் என்றார் முஸ்லிம் காங்கிரஸில ் இருந்து அரசுக்கு தாவி கிழக்கு மாகாணசபை தேர்தலில் போட்டியிடும் கிஸ்புல்லா.

No comments: